Welcome

The Eco World

Submenu Section

Friday, 21 November 2014

,

Numerology – எண் கணித பலன்கள்



Numerology எண் 9 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்







9 எண் 9 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – செவ்வாய் (Mars) இயற்கையிலேயே துடிப்பும், வேகமும் கொணட் 9 எண்காரர்களின் சிறப்பு இயல்புகளை இங்கு விவரமாகப் பார்ப்போம். இந்த எண்ணின் நாயகர் முருகப் பெருமான் அவரே தேவர்களுக்குச் சேனாதிபதியாவார். எனவே சேனாதிபதிக்குள்ளகட்டுப்பாடும், திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் இவர்களுக்கு உண்டு. இரத்தத்தைப் பார்த்து இவர்கள் பயப்பட மாட்டார்கள். தெருச் சண்டை, யுத்தக்களம் போன்ற இடங்களில் இவர்களைப் பார்க்கலாம். மேலும் அதிகாரமுள்ள காவல்துறை, இராணுவம் ஆகிய தொழிலில் மிகவும் விருப்பம்…








எண் 8 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்







8 எண் 8 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சனி (saturn) மனிதர்கள் எப்போதும் இன்பத்தையே தேடி ஓடுகிறார்கள். “சுவையாக இருக்கிறது” என்று அதிகமாக இனிப்புகள் சாப்பிட்டுவிட்டு, அதன் பின்பு செரிமாணம் ஆகாமல், வயிறு சரியில்லை, சர்க்கரை நிலை உடம்பில் ஏறிவிட்டது என்று தவிப்பவர்கள்தான் இன்றைய உலகில் அதிகம்! அரிய நெல்லிக்கனியானது சாப்பிடும்போது கசக்கும். ஆனால் சாப்பிட்ட பின்பு மிகவும் இனிக்கும். மேலும் உடலின் ஆரோக்கியத்திற்கும் இந்தக் கனி மிகவும் சிறந்தது! இருப்பினும் நெல்லிக்கனியைச் சாப்பிடும்போது கசப்பு என்ற காரணத்திற்காகப் பெரும்பாலோர்…








எண் 7 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்







7 எண் 7 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – கேது (Dragon’s Head) இப்போது இல்லற சந்நியாசிகளாக 7ம் எண்காரர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். சோதிட நூல்கள் எல்லாம் இந்தக் கேதுவைப் பற்றி மிகவும் பயமுறுத்துகின்றன. கேதுவைப் போல் கெடுப்பானில்லை! இராகுவைப் போல் கொடுப்பானில்லை என்று சோதிட சாத்திரங்கள் கூறுகின்றன. இவர் விஷ்வபாகு என்ற அரக்கனேயாவார். (புராண காலத்தில்) பல்வேறு காரணங்களினால் தேவர்கள் மிகவும் பலவீனமாகவும் சோர்ந்தும் இருந்தார்கள். அசுரர்களைவிட தேவர்கள் மிகவும் பலம் குன்றியிருந்தனர். அசுரர்களின் செல்வாக்கு அப்போது ஓங்கியிருந்தது!…








எண் 6 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்







6 எண் 6 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சுக்கிரன் (Venus) ஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6ம் எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே (விணீtமீக்ஷீவீணீறீ கீஷீக்ஷீறீபீ) நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். அது மட்டுமல்ல அப்படிப் பேசுபவர்களைக் கண்டால் கிண்டலும், குதர்க்கமும் செய்வார்கள். இன்பம், பணம், சுகமான அனுபவங்கள் நோக்கிலே இவர்கள் ஓடுவார்கள்! சுயநலம் மிகுந்தவர்கள் இவர்கள்தான். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும்…








எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்







5 எண் 5 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – புதன் (Mercury) இந்த எண் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண்ணாகும். அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவாக உள்ளது. மிக நன்மையும், அதிர்ஷ்டமும் தருவது இந்த எண்ணாகும். புதனின் ஆதிக்கம் வலுத்து இருப்பவர்களுக்குப் பெருத்த யோகங்களைக் கொடுக்கும். புதனின் எண் இல்லாதவர்களுக்கும்கூட இந்த ஆதிக்கமானது, நல்ல பலன்களைத் தரவல்லது! இதனாலேயே பெரும்பாலான எண் சோதிடர்கள், பெயர் எண் 5 ஆக வரும்படி அமைத்துக் கொடுக்கிறார்கள். மற்ற அதிர்ஷ்ட எண்களான 1, 3, 6, 9 ஆகியவைகள் (அந்தக் குறிப்பிட்ட எண்ணானது) நல்ல…








எண் 4 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்







4 எண் 4 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – இராகு (Dragon’s Tail) இப்போது சர்வவல்லமையுள்ள இராகு பகவானின் ஆதிக்கத்திற்குரிய எண்ணான 4&ஐப் பற்றிப் பார்ப்போம். (சாதகத்தின்படி) நவக்கிரகங்களின் (நைசிக பலம்) பலத்தில், இராகு பகவான் தான் பலவான் என்றாலும், எண்களை சாத்திரத்தில் நான்கு எண் அவ்வளவு வலிமை மிகுந்த எண்ணாகச் சொல்லப்படவில்லை! சூரியனின் எண்ணான 1 ஆம் எண்ணைச் சார்ந்தே இதன் பலன்களும், நடைமுறைகளும், அதிர்ஷ்டங்களும் உள்ளன! மேலும் 1&ம் எண்ணிற்கு மிகவும் நட்புடையதாகவும் விளங்குகிறது. வெளிநாட்டு எண்கணித மேதைகள் இதை (4 எண்) யுரேனஸ்…








எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்







3 எண் 3 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – குரு (Jupiter) ஒன்பது எண்களில் 3ம் எண்ணிற்குத் தனிச்சிறப்பு உண்டு. தேவகுருவான பிரகஸ்பதிக்கு உரியது. எப்போதுமே அடுத்தவர்க்கு நல்லது மட்டுமே செய்பவர்கள் இவர்கள்தான். இவர்களது திறமையையும், புத்திசாலித் தனத்தையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு, இவர்களுக்குரிய மரியாதையைச் செய்ய மாட்டார்கள். தனக்கு எதிரியான 6 எண்காரர்களுக்கும் இவர்கள் நன்மையே செய்வார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு உதவாமல், பல பிரச்சினைகளைக் கொடுப்பார்கள். தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவி செய்வார்கள். தங்களை மற்றவர்கள்…








எண் 2 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்







2 எண் 2 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சந்திரன் (Moon) இந்த 2ம் எண்ணைப் பற்றி அனைத்து நூல்களும் மக்களை தேவையில்லாமல் பயப்படுத்துகின்றன. உண்மை அதுவன்று. பெரும் மரங்கள் சாய்ந்தாலும் நாணல் மட்டும் நிலைத்து நிற்கம். ஒவ்வொருவர் வாழ்விலும் புயல் (சோதனைகள்) என்பது நிச்சயம் ஏற்படும். அதற்கு எந்த எண்ணும் விதிவிலக்கல்ல. மற்ற எண்காரர்கள் துவண்டு விடும்போது இவர்கள் மட்டும் வாழ்க்கையின் சோதனைகளில் வளைந்து கொடுத்து, முன்னேறி விடுவார்கள். அம்பாளின் அருள் பெற்ற எண் இது. பகலுக்கு இராஜா சூரியன் என்றால் இரவுக்கு ராணி சந்திரன். சூரியன் தந்தைகாரன்…








எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்







1 எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் – சூரியன் (Sun) எல்லா எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிற்தநவர்கள் பழகுவதற்கும், பார் வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்த கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள். அடுத்தவர்களுடன்





The post Numerology – எண் கணித பலன்கள் appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1r5cHoz

via IFTTT
Publisher: Unknown - 09:11
,

பெண்களுக்கான மச்ச பலன்கள்

நெற்றியில் மச்சம் இருந்தால் அந்த பெண் நல்ல புகழ் பெறுவாள். தீட்சை பெற்று நல்ல கீர்த்தியுடன் சிறந்து விளங்குவாள்.


புருவத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணுக்கு மிகவும் நல்லகுணம் . உயரிய அந்தஸ்து அடைவாள்.


காதில் மச்சம் இருந்தால் நிச்சயம் அந்தப் பெண்ணுக்கு ஆண் வாரிசு, அதாவது மகன் பிறப்பான்.


மூக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சகல சவால்களிலும் வெற்றி பெறுவாள்.


உதட்டில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் சாந்த குணம் கொண்டவளாய் இருப்பாள். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம் ஆகியவை அந்தப் பெண்னை தேடி வரும்.


நாக்கில் மச்சம் இருந்தால் அந்தப் பெண் நிறைய பொய் சொல்வாள்.


தாடையில் மச்சம் இருந்தால் உயர்ந்த அந்தஸ்து பெறுவாள் அந்தப் பெண்.


கழுத்தில் மச்சம் இருந்தால் அந்தப் பெண்ணின் சந்ததி நன்கு விருத்தியடையும்.


மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, தாம்பத்ய சுகம் ஆகியவை பெற்று சிறந்து விளங்குவாள்.


மார்பகத்தில் சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள்.


மார்பகத்தில் கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு என சாஸ்திரம் சொல்கிறது.


உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி என்பது மச்ச சாஸ்திரத்தின் ஜோதிடம்.


முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டக்காரியாக திகழ்வாள் பெண்.


வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு, சொல்வத்தில் பஞ்சமில்லை.


தொப்புளில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி. உணவு பஞ்சமில்லை.


பெண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போக சுகம் தருபவள்.


பெண் குறி வலது பக்கம் உயர்ந்து இருந்தால் பெண் குழந்தை அதிகம் பிறக்கும்.


பெண் குறி இடது பக்கம் உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை அதிகம் பிறக்கும்.


பெண் குறி சமமாக உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை, பெண் குழந்தை இரண்டும் பிறக்கும்.


வலது தொடையில் மச்சம் இருந்தால் உயர்வு.


இடது தொடையில் மச்சம் இருந்தால் துரதிஸ்தம்.


வலது முழங்காலில் மச்சம் இருந்தால் சதா தீர்தயாத்திரை.


இடது முழங்காலில் மச்சம் இருந்தால் இறை நம்பிக்கை அற்றவர்.


பாதத்தில் மச்சம் இருந்தால் ஆச்சர அனுஸ்டானம் உள்ளவள்.


மச்சங்களைப் பற்றி விள‌க்கமாக‌ச் சொ‌ல்லு‌ங்கள்!


அறிவியல் அறிஞர்கள், இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும்.


மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும்.


சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது.


மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும்.


நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம், கடத்தப்படுதல், தீரா நோய், கோர மரணம், ஊரை விட்டு ஒதுக்கப்படுவது, உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும்.


ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல், குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். மனசாட்சிக்கு அப்பார்பட்ட செயல்களை செய்வார்கள்.


குரு மேட்டில் மச்சம் இருந்தால் பெரிய பதவிகளில் இருப்பார்கள், திடீரென தூக்கி எறியப்படுவார்கள்.


சுண்டு விரலுக்குக் கீழே இருப்பது புதன் மேடு. அதற்குக் கீழே இருப்பது செவ்வாய் மேடு. செவ்வாய் மேட்டில், உள் செவ்வாய் மேடு, வெளிச் செவ்வாய் மேடு என்று இரண்டு வகைப்படும்.


உள்செவ்வாய் மேட்டில் கரும்புள்ளி இருந்தால் திடீர் யோகம் உண்டாகும். ஆனால் அதனை அனுபவிக்க துணைவியர் இல்லை என்று புலம்ப வைக்கும்.


வெளிச் செவ்வாயில் கரும்புள்ளி இருந்தால் அரசு வழியிலோ அல்லது வழக்குகளிலோ நமது சொத்துகள் பறிபோகும். அதாவது சாலை அமைக்க நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளுதல், வழக்கில் எதிராளிக்குச் சாதகமாக தீர்ப்பு அமைந்து சொத்து கைவிட்டுப் போதல் போன்றவை ஏற்படும்.


கட்டை விரலுக்குக் கீழே இருக்கும் மேடு சுக்கிரன் மேடு. ரொம்ப முக்கியமான மேடு. சுக்கிர மேட்டில் மெல்லிய கோடுகள் இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும். புள்ளிகள் இல்லாமல் இருப்பதுதான் நல்லது.


புள்ளி இருந்தால் அது ஒழுக்கக் கேடு. பலருடன் செல்வது, பல பெண்களிடம் செல்வது போன்றவை ஏற்படும். உடலுறவில் பல்வேறு தவறான உணர்ச்சிகளைக் கொண்டிருப்பார்கள்.


சுக்கிரன் மேட்டிற்கும், வெளிச் செவ்வாய் மேட்டிற்கும் கீழே நடுவே இருப்பது சந்திரன் மேடு. அதாவது உள்ளங்கையின் சுண்டு விரலுக்குக் கீழே கடைசியான மூலைப் பகுதிதான் சந்திரன் மேடு.


சந்திரன் மேட்டில் புள்ளிகள் இருந்தால் மனநலம் குன்றியக் குழந்தைகள், நரம்புக் கோளாறு போன்றவை ஏற்படும்.


The post பெண்களுக்கான மச்ச பலன்கள் appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1ujgEGi

via IFTTT
Publisher: Unknown - 07:39
,

Quick Facts – Karbonn ST72

Quick Facts - Karbonn ST72


Quick Facts about Karbon ST72



  • 7.0-inch (1024×600 pixels) LCD display

  • Dual-core 1.3 GHz processor

  • 512 MB RAM | 4 GB internal memory | 32 GB expandable via microSD card

  • 3.2 MP primary camera | 0.3 MP front camera

  • 3G | GPRS | EDGE | Bluetooth | GPS | Wi-Fi 802.11 b/g/n | USB port connectivity

  • 2800 mAh battery

  • Android v4.4.2 KitKat OS


Click here to know more about Karbon ST72


The post Quick Facts – Karbonn ST72 appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1r4N8E7

via IFTTT
Publisher: Unknown - 07:22
,

Quick Facts – OBI Hornbill S551

Quick Facts - OBI Hornbill S551


Quick Facts about Obi Hornbill S551



  • 5.5-inch (1280×720 pixels) HD IPS display

  • Quad-core 1.3 GHz processor

  • 1 GB RAM | 8 GB internal memory | 32 GB expandable via microSD

  • 13 MP primary camera | Sony Sensor | LED Flash | 5 MP front camera

  • 3G | GPRS | EDGE | Wi-Fi 802.11 b/g/n | Wi-Fi hotspot| Bluetooth v4.0 | MicroUSB v2.0 | GPS connectivity

  • Li-Ion 2200 mAh battery

  • Android v4.4 KitKat OS


Click here to know more about Obi Hornbill S551


The post Quick Facts – OBI Hornbill S551 appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1r4N8nI

via IFTTT
Publisher: Unknown - 07:22
,

2015 Nissan Kicks Concept

 2015 Nissan Kicks Concept Nissan has revealed its ‘2015 Kicks concept’ at the biggest Sao Paulo Motor Show, which takes place in Brazil after every two years. It was designed in Japan under the supervision of Global design center, whereas Design America Rio has also contributed in this project. Unlike the usual colors Black, White and Silver, Kicks Concept gets an impressing combination of Grey and Orange shades. Mamoru Aoki, the global strategy boss of Nissan revealed that, Kicks concept is inspired by the Brazilian streets and people which is the main reason of using vibrant color combo in this car. You can have its glimpse in the second week of motor show. Well, its production has not started yet; the production team is waiting for the orders.


The post 2015 Nissan Kicks Concept appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1uj7fyt

via IFTTT
Publisher: Unknown - 07:05
,

Mitsubishi Pajero Sport AT vs. Hyundai Santa Fe Dynamic AT

Mitsubishi Pajero Sport AT vs. Hyundai Santa Fe Dynamic AT


Mitsubishi Pajero Sport AT vs. Hyundai Santa Fe Dynamic AT


Quick Facts about New Mitsubishi Pajero Sport Automatic



  • 2.5L 16 Valve intercooled turbocharged DOHC common rail DI-D

  • Maximum power of 175.6 Bhp @ 4000 rpm

  • Maximum torque of 350 Nm @ 1800 rpm

  • 5-speed Automatic Gearbox

  • Top speed of 190 KMPH

  • 16″ Ventilated Discs | 16″ Ventilated Drum-In-Discs

  • Double wishbone with coil spring suspension With Stabilizer Bars


Click here to read more about New Mitsubishi Pajero Sport Automatic.


Fast Facts about Hyundai Sante Fe Dynamic AT



  • 2199cc, CRDi, 4-cylinder diesel engine

  • Maximum power of 197 Bhp @ 3800 rpm

  • Maximum torque of 436 NM @ 1800 rpm

  • 6-speed automatic gearbox

  • Top speed of 183 KMPH

  • MacPherson Strut| Multi Link Type

  • Ex-showroom price of 26.41 lakhs

  • Real world mileage of 11 KMPL


Click here to know more about Hyundai Santa Fe.


The post Mitsubishi Pajero Sport AT vs. Hyundai Santa Fe Dynamic AT appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1xZcf1c

via IFTTT
Publisher: Unknown - 07:05
,

TVS Apache RTR 180 vs. Bajaj Pulsar 180

TVS Apache RTR 180 vs. Bajaj Pulsar 180


TVS Apache RTR 180 vs. Bajaj Pulsar 180


Quick Facts about the TVS Apache RTR 180



  • 177.4cc, 4 Stroke air-cooled engine

  • Maximum power of 17.03 Bhp @ 8500 rpm

  • Maximum torque of 15.5 Nm @ 6500 rpm

  • 5-speed transmission

  • Front telescopic forks and rear gas shocks, rectangular swing arm

  • 270mm front petal disc and 200mm rear petal disc brake

  • Kerb weight of the bike is 139kgs

  • Available in 3 shades: White, Gray and Black


Click here to read in-depth review of the Apache RTR 180.


Quick Facts about the Bajaj Pulsar 180



  • 178.6cc, DTSi, air-cooled engine

  • Maximum power of 16.8 Bhp @ 8500 rpm

  • Maximum torque of 14.2 Nm @ 6500 rpm

  • 5-speed transmission

  • Telescopic 130mm stroke and triple rated spring, 5 way adjustable with 101mm travel nitrox shock absorber

  • 260mm front disc and 130mm rear drum brake

  • Kerb weight of the bike is 145kgs

  • Available in 3 shades: Sapphire Blue, Pearl Metallic White and Cocktail Wine Red


Click here to read more about the Bajaj Pulsar 180.


The post TVS Apache RTR 180 vs. Bajaj Pulsar 180 appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1xZcedA

via IFTTT
Publisher: Unknown - 07:05
,

Yamaha TDM900 – Smart Weapon

Yamaha TDM900 - Smart Weapon


Quick Facts about Yamaha TDM900



  • 827cc, Liquid-cooled, 4-stroke, DOHC, 5-valve, parallel twin

  • 6-speed transmission

  • Aluminium diamond frame

  • Telescopic front fork with 150mm travel

  • Monocross rear suspension with 133mm travel

  • Maximum power of 86.2 HP @ 7500 rpm

  • Maximum torque of 88.8 NM @ 6000 rpm

  • Top Speed of Yamaha TDM900 is 217 KMPH

  • Approximate mileage of the motorcycle is 18 KMPL

  • 298 dual front discs | 245 single rear disc

  • 120/70 ZR18 MC (59W) | 160/60 ZR17 MC (69W)


The post Yamaha TDM900 – Smart Weapon appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1v2spG5

via IFTTT
Publisher: Unknown - 06:44
,

Quick Facts – Alcatel One Touch Flash

Quick Facts - Alcatel One Touch Flash


Quick Facts about Alcatel One Touch Flash



  • 5.5-inch (1280×720 pixels) HD IPS Full lamination display

  • Octa-core 1.4 GHz processor

  • 1 GB RAM | 8 GB internal memory | 32 GB expandable via microSD card

  • 13 MP primary camera | Autofocus | LED Flash | 5 MP front camera

  • 3G | Bluetooth v4.0 | MicroUSB v2.0 | GPS | Wi-Fi 802.11 b/g/n | Wi-Fi Direct connectivity

  • 3200 mAh battery

  • Android v4.4 KitKat OS


Click here to know more about Alcatel One Touch Flash


The post Quick Facts – Alcatel One Touch Flash appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1v2smdm

via IFTTT
Publisher: Unknown - 06:44
,

ASUS ZenWatch – A Classic Design for Timeless Beauty

Quick Facts about ASUS Zen Watch



  • 1.63-inch (320×320 pixels) AMOLED display

  • Qualcomm Snapdragon 400 1.2 GHz processor

  • 512 MB RAM | 4 GB eMMC internal memory

  • Bluetooth v4.0 | MicroUSB connectivity

  • Polymer 1.4 Wh battery

  • Android Wear OS

  • 2.5D curved Corning Gorilla Glass 3 | IP55 certified Water resistance

  • 9 Axis | Bio Sensor


Click here to know more about ASUS Zen Watchzen watch


The post ASUS ZenWatch – A Classic Design for Timeless Beauty appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1uJmV1F

via IFTTT
Publisher: Unknown - 06:25
,

Samsung Gear S now available in India for INR 27,900

Quick Facts about Samsung Gear S 2.0-inch (360x480 pixels) Super AMOLED display Dual-core 1.0 GHz processor 512 MB RAM | 4 GB internal memory 2G | 3G | GPRS | EDGE | Bluetooth v4.1 | A-GPS | MicroUSB v2.0 | Wi-Fi 802.11 b/g/n connectivity Li-ion 300 mAh battery Tizen based OS Click here to know more about Samsung Gear S


Quick Facts about Samsung Gear S



  • 2.0-inch (360×480 pixels) Super AMOLED display

  • Dual-core 1.0 GHz processor

  • 512 MB RAM | 4 GB internal memory

  • 2G | 3G | GPRS | EDGE | Bluetooth v4.1 | A-GPS | MicroUSB v2.0 | Wi-Fi 802.11 b/g/n connectivity

  • Li-ion 300 mAh battery

  • Tizen based OS


Click here to know more about Samsung Gear S


The post Samsung Gear S now available in India for INR 27,900 appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1uJmSCY

via IFTTT
Publisher: Unknown - 06:25
,

Quick Facts – Microsoft Lumia 535

lumia 535


Quick Facts about Microsoft Lumia 535



  • 5.0-inch (960×540 pixels) IPS LCD qHD display

  • Quad-core 1.2 GHz processor

  • 1 GB RAM | 8 GB internal memory | 128 GB expandable via microSD card

  • 5 MP primary camera | Autofocus | LED Flash | 5 MP front camera

  • 3G | GPRS | EDGE | Bluetooth v4.0 | GPS | A-GPS | MicroUSB v2.0 | Wi-Fi 802.11 b/g/n | Wi-Fi Hotspot connectivity

  • BL-L4A 1905 mAh battery

  • Windows Phone 8.1 with Lumia Denim OS


Click here to know more about Microsoft Lumia 535


The post Quick Facts – Microsoft Lumia 535 appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1uJmSmm

via IFTTT
Publisher: Unknown - 06:25

Wednesday, 19 November 2014

,

தர்மபுரி மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு: மது பழக்கமும் ஒரு காரணம் – அன்புமணி ராமதாஸ்



Anbumani Ramadoss condemn







குழந்தைகள் இறப்பதற்கு இங்கு உள்ள மருத்துவர்கள் காரணமல்ல என்று கூறியுள்ள தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், ஆண்கள் குடிப்பதினால் பெண்கள் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. குடிப்பழக்கம்தான் இதற்கெல்லாம் காரணம் என தெரிவித்துள்ளார்.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து வருவதையடுத்து, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி இன்று மருத்துவமனைக்கு சென்று குழந்தைகள் சிகிச்சை பிரிவை பார்வையிட்டவர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, குழந்தைகள் இறப்பதற்கு இங்கு உள்ள மருத்துவர்கள் காரணமல்ல. ஆண்கள் குடிப்பதினால் பெண்கள் வேலைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. குடிப்பழக்கம்தான் இதற்கெல்லாம் காரணம். மதுக்கடைகளை மூடுவது சம்பந்தமாக முதல்வரை சந்தித்து பேசுவேன்.

போதுமான மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக இருதய பிரிவுகளுக்கு மருத்துவர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. மருத்துவர் பற்றாக்குறையை உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையை இங்கு கொண்டுவர வேண்டும். மற்றபடி குழந்தைகள் இறப்பதற்கு மருத்துவர்கள் காரணமல்ல” என்றார்.




The post தர்மபுரி மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு: மது பழக்கமும் ஒரு காரணம் – அன்புமணி ராமதாஸ் appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/14MbVrO

via IFTTT
Publisher: Unknown - 09:30

Monday, 17 November 2014

,

சோழவளநாடு

சோழவளநாடு நாங்கள் பிறந்து வளர்ந்த பூமி. சோழ நாடு சோறுடைத்து. இங்கே மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த காலமும் உண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பாசனத்திற்கு தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவல நிலை. காவிரிப் பெண்ணிற்கு கர்நாடகம் பிறந்த வீடு என்றாலும், தமிழகம் புகுந்த வீடு. புகுந்த வீட்டிற்கு வந்து வளம் சேர்த்த காவிரிப் பெண்ணை, இப்போதெல்லாம் புகுந்த வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறார்கள். காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை நம்பியே சோழ வளநாட்டின் விவசாயம் இருந்த காலம் பொற்காலம்.


இந்த பூமியும் வானம் பார்த்த பூமியாகி பல காலம் ஆகிவிட்டது. மனிதர்கள் தராத தண்ணீரை மகேசன் தருகிறார் மழையாக. மூன்று புறமும் கடல் நீரால் சூழப்பட்ட நாம் ஒருபக்கம் சுயநல நெருப்பால் சூழப்பட்டுள்ளோம். இவர்கள் தண்ணீருக்கு மட்டும் அணை கட்டவில்லை. மனித நேயத்திற்கும் சேர்த்து அணை கட்டுகிறார்கள். இங்கே நம்மில் இரும்பிலே இதயம் முளைக்கின்ற காலத்தில் அங்கே இதயங்கள் இரும்பாகிப் போயினவே. குதிரை பேரத்தில் மூழ்கி காணாமல் போனவர்கள் தண்ணீர் என்றதும் ஒன்று கூடும் மனிதர்கள் வாழும் பூமியில் இருந்து தண்ணீருக்கு நாம் கையேந்தி நிற்க அவசியம் ஏற்படாதவாறு இந்த ஆண்டு நல்ல மழை, காலத்தே பொழிய இறைவனை பிரார்த்தித்து வருண பகவானை துணைக்கு அழைப்போம். வடமேற்கிலிருந்து வராத தண்ணீர் வடகிழக்கினால் கொட்டட்டும்.


பொதுவாக காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகூர், ஒரத்தநாடு, முத்துப்பேட்டை, பூம்புகார் போன்ற ஊர்களில் சாலை மார்கமாகவோ, புகைவண்டி மார்கமாகவோ பயணம் செய்வது ஒரு அலாதியான, இனிமையான சந்தோஷத்தைக் கொடுக்கும் பயணம் தான். இப்பகுதியில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணம் செய்வதில் எந்த வித உடல் சோர்வோ, பயணக் களைப்போ தெரியாது. இதற்கு முக்கிய காரணம், பசுமையான வயல்வெளிகள், அடர்த்தியான மரங்கள், ஆற்றுப் படுகைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், வயல்வெளிகளின் உட்புறத்திலே காணப்படும் பெரிய கிணறுகள், தண்ணீர் அருவி போல் கொட்டும் ஆழ் குழாய் கிணறுகள், இவற்றின் உதவியால் வருடம் முழுவதும் பசுமை வண்ணமே இங்கு படர்ந்திருக்கும்.


பேருந்திலே பயணம் செய்யும் போது எஸ்.ஏ. ராஜ்குமாரின் புண்ணியத்தில் பிரபலமான லா லா லா பாடல்கள் ஒலித்த காலம் அது. இது போன்ற வளமான பகுதிகளைக் கடந்து செல்லும் வேளையில் இந்தப் பாடல்கள் செவிக்கு உணவாகவும், பயிர்கள் கண்ணிற்கு உணவாகவும் ஒன்றிணைந்த பயணம், ஆஹா, சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் பகுதிகளில் பயணம் செய்வது போல் வருமா. அநேகமாக இப்படி நாங்கள் பேருந்து பயணத்தில் கேட்டுத்தான் லா லா லா மிகவும் பிரபலமானதோ என்னவோ. நான் சொல்வது உண்மை என்பதை நீங்கள் இப்பகுதிகளில் பயணம் மேற்கொண்டு அந்த சுகானுபவத்தை பெறலாம்.




உளவியல் ரீதியாகவே பச்சை நிறத்திற்கு எல்லா வித வலிகளையும் போக்கும் தன்மை உண்டு என்று சொல்வார்கள். இங்கே ஓர் வழக்கம் உண்டு. காலில் முள் எடுக்கும் போது வலி தெரியாமல் இருக்க பச்சை நிறத்தை பார்த்துக்கொள்ளச் சொல்வார்கள். இப்பகுதி விளை நிலங்களில் காணும் அழகு பச்சை வண்ணத்தை வேறு எங்கும் காணமுடியாது. இந்த மண்ணின் தன்மை அப்படிப்பட்டது. நாங்கள் சொந்த ஊர்ப் பக்கம் செல்லும்போது எங்களைத் தலையாட்டி முதலில் வரவேற்பது அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்பயிர்கள்தான். காவிரித் தாய் கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்து , தனது நெடுந்தூரப் பயணத்தை பல ஊர்கள் வழியாக வந்து கடைசியில் கடலில் கலப்பது எங்கள் ஊர் பகுதியான பூம்புகாரில் தான்.


இங்கே வாழும் மக்களை மதங்கள் கூட பிரித்துப் பார்த்ததில்லை. எங்கள் குடும்பங்களில் வேண்டுதல்கள் கோயில்களோடு நின்று விடுவதில்லை. மன்னார்குடியில் உப்புக்காரத்தெருவில் ஒரு மாரியம்மன் கோயில் உள்ளது. அங்கே இஸ்லாமியர்கள் வந்து உடல் பிரச்சினைகள் தீர மந்திரம் போட்டுச் செல்வார்கள். நாகூர் தர்காவிலும் நேர்த்திக்கடனை செலுத்துவோம், வேளாங்கண்ணி மாதா கோயிலிலும் மரக்கண் வாங்கி நட்டு வேண்டுதல் நிறைவேற்றுவோம். சிக்கல் சிங்கார வேலன் கோயிலிலும் நிறைவேற்றுவோம். நாகை பகுதிக்கு தெய்வீகச் சுற்றுலா சென்றால் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா, சிக்கல் சிங்கார வேலன் மூவரையும் தரிசித்த பின்னரே எங்கள் பயணம் நிறைவுபெறும். இது ஏதோ வினோதமான அதிசயமான விஷயமாக நாங்கள் கருதுவதில்லை. எங்கள் பகுதி மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட புனிதமான விஷயம் இது. இந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. என்றும் தொடரும்.


மன்னை, இன்றும் திண்ணை வைத்த வீடுகளைப் பார்க்கலாம். பழமை மாறாத ஊர்.


மயிலாடுதுறை, பழமையை வெளியேற்றாமல் புதுமை புகுந்து விளையாடும் ஊர்.


கும்பகோணம், குட்டி மும்பை என்று சொல்லும் அளவிற்கு பொருளாதாரத்தில், வியாபாரத்தில் செழித்தோங்கும் ஊர்.


தஞ்சை, தமிழ் மாநாடு நடத்திய பெருமை கொண்ட ஊர். கலையழகு கொஞ்சும் தரணி போற்றும் ஊர்.


நாகை, சுனாமி சுழற்றி அடித்தாலும் சுயம்பாய் எழுந்து நிற்போம் என்று தன்னம்பிக்கையின் இருப்பிடமாய் விளங்கும் ஊர்.


திருவாரூர், இந்த ஊரைப் பற்றி நான் சொல்வதை விட இவ்வூரின் பெருமை என்னவென்று உங்கள் அனைவருக்குமே தெரியும். அழகான ஆழித் தேர் கொண்ட ஊர் என்பது தனி கதை.


திருவையாறு இசை ஆசான்களின் இருப்பிடம். இசைப் பிரியர்களின் கொள்ளிடம்.


நாகூர், மெக்காவிற்கு அடுத்து அதிகம் பேர் வரவிரும்பும் ஊர்.


வேளாங்கண்ணி, வாடிகன் சிட்டிக்கு அடுத்து அதிகம் மக்கள் வர பிரியப் படும் ஊர்.


வேதாரண்யம், முத்துப்பேட்டை கடல் மாதாவின் முத்துக்கள்.


பூம்புகார், தமிழன் கடல் மார்கமாகவும் தன் வாணிபங்களை விரிவு படுத்தியுள்ளான் என்பதை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ள உதவும் ஊர்.


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் சோழவளநாட்டின் பெருமைகளை. இந்த காவிரிப் படுகை சார்ந்த ஊர்கள் ஒவ்வொன்றுக்கும் செல்லும்போதும் சொந்த ஊருக்குச் சென்ற நினைப்புதான் வருமே தவிர வேறு ஊருக்குச் சென்ற எண்ணம் தோன்றாது. ஆனால் விளை நிலங்கள் வீடுகளாக மாறும் அவலம் இங்கும் நிகழ்கிறது. விவசாயத்தை படித்தவர்களும் ஒரு தொழிலாக எடுத்து செய்யும் காலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாட்டிற்கே படியளக்கும் வண்ணம் எங்கள் தஞ்சை மண் நெற்களஞ்சியமாக விளங்கியது ஒரு காலத்தில். மீண்டும் அதே போன்றதொரு நல்ல நிலை வர வேண்டும் என்பதே எங்கள் பகுதி மக்களின் அவா.


ஒரு ஊரில் பிறந்து வளர்ந்து அங்கேயே தங்கள் காலத்தைக் கழிக்க வாய்ப்பில்லாமல் வேலை நிமித்தமாக பல்வேறு ஊர்களுக்கு , நாடுகளுக்கு சென்று வாழ்பவர்களின் மனநிலையைத்தான் நான் பிரதிபலித்துள்ளேன். இன்னும் சொல்லப் போனால் இப்போது நாங்கள் வாழும் பூமிதான் இன்றைய பொழுதிற்கு எங்களுக்கு சோறு போடும் ஊர். இந்த சொந்த ஊர் பாசமெல்லாம் வருடத்தில் எப்போதாவது வரும் பண்டிகைகளின் சந்தோஷங்களைப் போல கனவில் வந்து போகும் கடவுள் முகம் போல.


மரம் தன் கிளைகளை எங்கு பரவி வளர்ந்தாலும் வேர்தான் அடிப்படை. ஊர் பாசம் உள்ளவர்களுக்கு சொந்த மண் தான் அடிப்படை. இப்படி நான் குறிப்பிட்டுள்ள அனைத்து ஊர்களின் சிறப்புக்களைப் பற்றி தனித்தனி பதிவுகள் எழுத ஆசை உண்டு. அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்.


பட உதவி: gkamesh.wordpress.com


The post சோழவளநாடு appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1ydR8X9

via IFTTT
Publisher: Unknown - 10:39
,

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்.




திருஞானசம்பந்தர் தேவாரம்:

முத்திலங்கு முறுவல் லுமையஞ்சவே

மத்தயானை மருகவ் வுரிவாங்கியக்

கத்தை போர்த்த கடவுள் கருகாவூர்ரெம்

அத்தர் வண்ணம் மழலும் அழல் வண்ணமே!!


அப்பர் திருத்தாண்டவம்:

குருகாம் வயிரமாம் கூறு நாளாம்

கொள்ளும் கிழமையாம் கோளேதானாம்

பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்

பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்

ஒருகால் உமையாளோர் பாகனுமாம்

உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்

கருவாய் உலகுக்கு முன்னே தோன்றுங்

கண்ணாம்கருகாவூ ரெந்தைதானே!!


பாபநாசத் திருப்பதிகம்:

மருகல் உறையும் மாணிக்கத்தை

வலஞ்சுழியில் மாமாலையைக்

கருகாவூரில் கற்பகத்தைக் .

காண்டற்கரிய கதிரொளியைப்

பெருவேளூர் எம்பிறப்பிலியை

பேணுவார்கள் பரிவரிய

திருவாஞ்சியத் தெம் செல்வனை

சிந்தையுள்ளே வைத்தேனே!!


க்ஷேத்திரக் கோவைத் திருப்பதிகம்:

திண்டிச்சரம் செய்ஞலூர் செம்பொன்பள்ளி

தெவூர்சிராபுரம் சிற்றேம் சேறை

கோண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர்

கூடல் குருகாவூர் வெள்ளடை குமரிகொங்கு

அண்டர்தொழும் அதிகை வீரட்டானம்

ஐயாறு அசோகந்தி ஆமத்தூரும்

கண்டியூர் வீரட்டம்கருகாவூரும்

கயிலாய நாதனையே காணலாமே!!

– அப்பர்


திருக்கோயில் அமைவிடம்:

பாடல் பெற்ற 276 தேவாரத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் இருந்து 6 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து20 km தூரத்திலும், சாலியமங்கலத்தில் இருந்து 10 km தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து20 km தொலைவிலும் சிறப்புற அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு கும்பகோணத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் பாபநாசம் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து திருக்கருகாவூர் என்னும் இத்திருத்தலம் அமைந்துள்ள சிற்றூரை அடையலாம்.


திருக்கோயில் குறிப்பு:

தலமூர்த்தி: முல்லைவனநாதர் (மூவலிங்கமூர்த்தி, மாதவிவனேச்சுவரர், கர்ப்பபுரீச்சுவரர், கருகாவூர் கற்பகம்)

தல இறைவி: கர்ப்பரட்சாம்பிகை (கருகாத்தநாயகி, கரும்பானையாள்)

தல விருட்சம்: முல்லைக்கொடி

தல தீர்த்தம்: க்ஷீரகுண்டம் (பாற்குளம்) (கோவிலின் முன்புறம்), சத்திய கூபம் (சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில்), பிரம்ம தீர்த்தம் (இவ்வூரின் தென்மேற்கே), விருத்த காவிரி (முள்ளிவாய்) (திருக்கோயிலுக்கு தென்மேற்கே)










இத்திருக்கோயில் இறைவன் திருக்கருகாவூர் மகாதேவர், திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். திருநாவுக்கரசர் மேலும் இவ்விறைவனை தனது அன்பின் பக்தியின் மிகுதியால் குருகு வைரம், அமிர்தம், பாலின் நெய், பழத்தின் சுவை, பாட்டில் பண், வித்து பரஞ்சோதி, எட்டுருவ மூர்த்தி என்றும் தனது பாடல்கள் மூலம் போற்றிப் புகழ்கிறார்.


திருத்தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இத்தலம் இருக்குமிடம் முல்லைவனமாக இருந்தது. அந்த அழகிய வனத்தில் கௌதமர், கார்க்கேயர் என இரு முனிவர்கள் இறைவனை வேண்டி தவமிருந்தனர். இந்த இரு இறை அன்பர்களுக்கும் நித்துருவர்-வேதிகை தம்பதியினர், முல்லை வனத்திலேயே தங்கி இருந்து சேவை செய்து வாழ்ந்து வந்தனர். தம்பதியர் இருவரும் இறைப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மனதில் பெரிய குறை ஒன்றிருந்தது. தங்களுக்கு குழந்தைப் பேறு இல்லையே என்று வருத்தம் இருந்தது. அந்த மனக்குறையை முனிவர்களிடம் கூறினர். அதற்கு அம்முனிவர் பெருமான்கள் இந்த முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கிட நீங்கள் வேண்டி நிற்பது கிடைக்கும் என வாழ்த்தினர். அவ்வாறே அம்மையப்பனை வணங்கி மக்கட்பேறு கிடைக்கப் பெற்றனர்.


இவ்வாறு வேதிகை கருவுற்றிருந்த சமயம், கணவர் இல்லாமல் வேதிகை மட்டும் தனித்திருந்த நேரத்தில் சுகமான சுமையான கருவை சுமந்திருந்த காரணத்தினால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, உடல் சோர்ந்த காரணம் வேதிகையால் முனிவருக்கு எழுந்து வந்து உணவிட முடியவில்லை. இதனை அறியாமல் கோபம் கொண்ட முனிவர் சாபமிட, இறைவன் அருளினால் அவள் பெற்ற கரு கலைந்தது. அம்பாளிடம் சென்று தன் நிலையை எடுத்து இயம்பினாள் வேதிகை. தன் பக்தையின் நிலை அறிந்து அன்னை கர்ப்பரட்சகியாக தோன்றி கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்து குழந்தை உருவாகும் நாள் வரை வைத்து காப்பாற்றி நைந்துருவன் என்ற பெயர் சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள் அன்னை.


கருகாத்த நாயகியின் மகிமையை நேரடியாக அனுபவித்த வேதிகை, இறைவியிடம் இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, இப்பூவுலகில் கருத்தரித்தவர்களையும் கருவையும் ஒருசேர காப்பாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்ய அன்னை அவ்வாறே இத்தலத்தில் வீற்றிருந்து நமக்கெல்லாம் அருளுகின்றாள். இதன் காரணமாகவே இத்தலம்திருக்கருகாவூர் என்றும், இத்தல இறைவி கர்ப்பரட்சாம்பிகை என்றும் பெயர் விளங்கப் பெற்றது. இந்த நேரத்தில் அருட்குழந்தை நைந்துருவனுக்கு கொடுக்க வேதிகையிடம் தாய்ப்பால் இல்லாத காரணத்தால், அம்பாள் காமதேனுவை அனுப்பி பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் பூமியில் கீறியதன் காரணத்தால் பால்குளம் தோன்றியது.




இந்த புனித குளம் இன்றும் திருக்கோயிலின் முன்புறம் க்ஷீரகுண்டம் என்ற பெயரில் இருந்து வருகிறது. இத்தல கருகாத்த நாயகியை மனதார வேண்டி வணங்கிட கரு உண்டாகிறது, கரு கலையாமல் நிலைக்கிறது, சுகப்பிரசவம் உண்டாகிறது என்பது மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.


இத்தல இறைவன் முல்லைவனநாதர் சுயம்புலிங்கமாகத் தோன்றியவர். இந்த லிங்கத்தின் சிறப்பு புற்று மண்ணினால் ஆன லிங்கம் என்பதே. அதனாலேயே இந்த லிங்க மேனிக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆகவே இறைவனுக்கு வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து இருந்தமைக்கான வடுவினை, அடையாளத்தினை இன்றும் காணலாம்.


பழைய தலவரலாறு:

பிரம்மன் பூஜித்த வரலாறு:

படைப்புக் கடவுளான பிரம்மன் தன் படைப்புத் தொழிலின் காரணமாக மிகுந்த கர்வம் கொண்டு அந்த ஆணவத்தினால் அத்தொழில் செய்ய முடியாமல் போனது. அதன் காரணமாக இங்கு வந்து திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் ஒரு தீர்த்தத்தை நிறுவி அதில் நீராடி முல்லைவனநாதரை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொண்டான்.


கார்க்கியர் பூஜித்த வரலாறு:

ஸ்வர்ணகாரன் என்ற வைசியன் தான் செய்த தீய செயல் காரணமாக பேயுரு அடைந்தான். அந்த உருவில் இருந்து தன்னை மீட்க வேண்டி கார்க்கியர் என்னும் முனிவரை நாடினான். அவரும் திருவாதிரை நன்னாளில் வைசியனை இத்திருக்கோயில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடச் செய்தார். அவனும் பேயுரு நீங்கப் பெற்றான்.


கௌதமர் பூஜித்த வரலாறு:

ஒரு சமயம் தன்னிடம் புகலிடம் அடைந்த சில முனிவர்களின் சூழ்ச்சியினால் கௌதம முனிவர் பசுவதை செய்த பாவத்திற்கு ஆளானார். அந்த நேரத்தில் போதாயனர் என்னும் முனிவரின் சொல்படி கௌதமர் திருக்கருகாவூர் வந்து புனித நீரில் நீராடி சிவலிங்கம் வைத்து பூஜித்தார். அவர் செய்த பசுவதை பழியும் நீங்கியது. அவர் வழிபட்ட லிங்கம் கௌதமேசுவரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியின் எதிரே தனிச் சன்னதியில் அமைந்துள்ளது.


மன்னர் குசத்துவன் சாப நீக்க வரலாறு:

மன்னன் குசத்துவன் ஒரு சமயம் சத்திய முனிவரின் சொல்லைக் கேட்காமல் அவர் வசித்த வனத்திலேயே வேட்டையாடினான். அதனால் முனிவரது சாபத்திற்கு ஆளாகி புலியின் உருவத்தைப் பெற்றான். தன் தவறை உணர்ந்து அம்முனிவரை மன்னன் வணங்கிட, அவர் இத்தலத்தில் உள்ள சத்தியகூப தீர்த்தத்தில் நீராடச் சொன்னார். அவ்வாறு செய்தமையால் மன்னன் தன் பழைய உருவினை அடைந்தான்.


சங்குகர்ணன் என்ற அந்தணனும் தன் சாபம் நீங்கப்பெற்ற தலம் இத்திருத்தலம். தட்சனது சாபத்தால் வேதனையுற்ற சந்திர பகவான் இங்கு வந்து பங்குனி பௌர்ணமி நாளில் சிவ பூஜை செய்து நல்ல கதி அடைந்தான். இன்றும் பங்குனி பௌர்ணமி நாளில் நிலவின் ஒளி இறைவன் திருமேனியில் படுவதைக் காணலாம்.


இத்தலத்தலம் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் போன்றவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். ராமலிங்க அடிகளாரும் இத்திருக்கோயிலைப் பாடியுள்ளார்.




திருக்கோயில் அமைப்பு:

திருக்களாவூர் என்னும் திருக்கருகாவூர் திருக்கோயிலில் தல இறைவன், விநாயகமூர்த்தி, நந்தி பகவான் மூவரும் சுயம்பு வடிவமாகவும், சிவன் சன்னதியின் பின்புறம் லிங்கோத்பவர் அமைந்திருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் அமைந்திருப்பது இத்தல சிறப்பாகும்.


பஞ்சாரண்யத் தலங்கள் என அழைக்கப்படும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய தலங்களில் முதலாவதாக அமைந்துள்ளது இந்த திருக்கருகாவூர் தலம். இத்திருத்தலத்திற்கு மாதவி வனம், முல்லைவனம் என மேலும் பல பெயர்கள் உள்ளன.


திருக்கருகாவூரைச் சேர்த்து ஒரே நாளில் தரிசித்துப் பலனடைய வேண்டிய திருக்கோயில்கள் பற்றிய விபரங்கள்:

1) முல்லைக்கொடி தலவிருட்சமாக உள்ள திருக்கருகாவூரில் விடியும் முன்னரே உஷத் காலத்தில் தரிசிக்க வேண்டும்.

2) பாதிரிமரம் தலவிருட்சமாக அமைந்துள்ள அவளிவனல்லூரில் காலை சந்தி காலத்தில் தரிசனம் செய்ய வேண்டும்.

3) வன்னிமரம் தலவிருட்சமாக உள்ள அரப்பெரும்பாழி என்னும் அரித்துவாரமங்கலத்தில் உச்சி காலத்தில் தரிசிக்க வேண்டும்.

4) பூளைமரம் தலவிருட்சமாக உள்ள இரும்பூளை ஆலங்குடியில் சாயங்காலத்தில் தரிசனம் மேற்கொள்ளவேண்டும்.

5) வில்வமரம் தலவிருட்சமாக உள்ள திருக்கொள்ளம்பூதூரில் அர்த்தஜாமப் பொழுதில் திருக்கோயில் தரிசனம் செய்யவேண்டும்.


திருக்கருகாவூர் சென்று கடவுள் வழிபாடு செய்வது முக்திக்கு வழிவகுக்கும் என்பதை,

தில்லை வனங் காசி திருவாரூர் மாயூரம்

முல்லை வனம் கூடல் முதுகுன்றம் நெல்லை களர்

காஞ்சி கழக்குன்றம் மறைக் காருடணை காளத்தி

வாஞ்சிய மென் முத்தி வரும்

இப்பாடல் மூலம் அறிய முடிகிறது.


பல்வேறு சிறப்புகளுடன் அமைந்துள்ள இத்தலம் சோமாஸ்கந்த வடிவத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனது சன்னதிக்கும், இறைவி சன்னதிக்கும் இடையினில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ள, இந்த சோமாஸ்கந்த அமைப்பினை சேர்ந்தாற்போல் வலம் வந்து வணங்குதல் சிறப்பு.




இராசகோபுரத்தினை வணங்கி உள்ளே சென்றதும் நம்மை வரவேற்பது நடவான மண்டபமும், வசந்த மண்டபமும்தான். அதன் பின் உட்கோபுரம் இரண்டாம் கோபுரத்தினை அடைந்து உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரத்தில் சுவாமி சன்னதியும் அம்பிகை கோயிலும் தனித்தனி பிரகாரத்தில் அமைந்துள்ளன. சுவாமி சன்னதிக்கு முன்னால் கொடிமரம், பலிபீடம், நந்தி போன்றவையும், பிராகாரத்தில் மடப்பள்ளி, அறுபத்துமூன்று நாயன்மார்களும், நடராஜர் சபா மண்டபமும், யாக சாலையும் உள்ளன. நடராஜர் சன்னதி, நவக்ரகங்கள், சோமஸ்கந்தர் சன்னதி, தல விநாயகர் கற்பக விநாயகர் சன்னதி, நடராஜருக்கு எதிரே, சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, நிருதி விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும், ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் சன்னதிகளும், தலவிருட்சமாகிய முல்லைக்கொடியும் அமையப் பெற்றுள்ளன. இந்த முல்லைக்கொடி சண்டேசுவரருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது.


இத்திருக்கோயிலை சுற்றி முல்லை மாகாளியம்மன் திருக்கோயிலும், வரதராஜ பெருமாள் திருக்கோயிலும், பிள்ளையார் கோயில் ஒன்றும், திரௌபதி அம்மன் திருக்கோயிலும், ஒரு மாரியம்மன் கோயிலும், ஐயனார் திருக்கோயில் ஒன்றும் அமைந்துள்ளன.


இத்திருக்கோயில் சோமஸ்கந்தர், நடராஜர், ஆறுமுகர் ஆகிய உற்சவ மூர்த்தி சிலைகள் அழகாம்சம் நிறைந்தவை.


திருவிழாக்கள்:

சுவாமிக்கு வைகாசி விசாக பிரம்மோற்சவமும், அன்னைக்கு ஆடிப்பூரம், நவராத்திரி விழாக்களும், நடராஜருக்கு ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. மேலும், அன்னாபிஷேகம், கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை சோமவாரம், கார்த்திகை தீபத் திருவிழா, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ விழாக்கள் போன்றவையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


முதலில் சிவ வணக்கமும் சக்தி வணக்கமும் தனித்தனியாக இருந்து பின்னர் இரண்டு வணக்கமும் ஒன்றாகத் திகழந்தது. காஞ்சிபுரம், கருகாவூர் தலங்களில் சோமஸ்கந்தர் அமைப்பைக் காணலாம். போகச்சக்திக்கு சிவசன்னதிக்கு அருகில் ஆலயம் இருக்கும். இங்கே தனியே அம்பாள் சன்னதி அமைந்துள்ளதால், இது வீரசக்தி என அழைக்கப்படுகிறது.


பிரதோஷ வழிபாடு:

இத்திருக்கோயிலில் வளர்பிறை பிரதோஷ தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. சுக்கில பட்ஷம், கிருஷ்ண பட்ஷம் என்னும் இரண்டு பட்சத்திலும் வருகின்ற திரயோதசி திதியில் சூரியன் மறைவதற்கு முன்னதாக மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்னர் மூன்றே முக்கால் நாழிகையும் பிரதோஷ காலம் என்கின்றனர். (மாலை 4:30 முதல் 7:30 மணி வரை உள்ள காலம்). இந்த நேரத்தில் சிவபிரான் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று நடனம் புரிகிறார் என்பது ஐதீகம்.


வாழ்க முல்லைவனநாதரின் பெருமை!!

வாழ்க கருகாத்த நாயகியின் அருள்!!

வாழ்க சீர் அடியாரெல்லாம்!!


திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரம்:

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்

சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்

ஆக்குகின் றான் கர்ப்பக் கோளகை யுள்ளிருந்

தாக்குநின் றான் அவன் ஆவதறிந்தே!!


அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்

செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்

பொறை நின்ற இன்னுயிர் போந்துற நாடிப்

பரிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே!!


இன்புறு காலத் திருவர்முன் பூறிய

துன்புறு பாசத் துயர்மனை வானுளன்

பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்

அன்புறு காலத் தமைந் தொழிந்தானே!!


கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்

புருடன் உடலில் பொருந்துமற் றோரார்

திருவின் கருங்குழி தேடித் புகுந்த

துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே!!


விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி

ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொ டேறிப்

பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்

ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே!!


பூவின் மணத்தை பொருந்திய வாயுவுந்

தாவி உலகின் தரிப்பித்த வாறுபோல்

மேவிய சீவினில் மெல்ல நீள் வாயுவுங்

கூவி அவிழுங் குறிகொண்ட போதே!!


போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்

மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்

நாகமும் எட்டுடன் நாலு புரவியும்

பாகன் விடானெனிற் பன்றியு மாமே!!


ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்

மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்

நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்

பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே!!


ஏயங் கலந்த இருவர்தரு சாபத்துப்

பாயுங் கருவும் உருவா மெனப்பல

காயங் கலந்தது காண பதிந்தபின்

மாயங் கலந்த மனோலய மானதே!!


கர்ப்பத்துக் கேவல மாயால் கிளைகூட்ட

நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ

வற்புறு காமியம் எட்டாதல் மயேயஞ்

சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே!!


என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்

செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து

இன்பால் உயிர்நிலைசெய்த இறையோங்கும்

நன்பால் ஒருவனை நாடுகின் றேனே!!


பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப்பகலோன்

இதஞ்செய்யும் மொத்துடல் எங்கும் புகுந்து

குதஞ் செய்யும் அங்கியின் கோபந்தணிப்பான்

விதஞ்செய்யு மாறே விதித்தொழிந்தானே!!


ஒழிபல செய்யும் வினையுற்ற நானே

வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்

பழிபல செய்கின்ற பாசக் கருவைக்

கழிபல வாங்கிச் சுடாமல் வைத்தானே!!


சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்

அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்

புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால் விரல்

அக்கரம் எட்டும் எண் சாணது வாகுமே!!


போகத்துள் ஆங்கே புகுந்து புனிதனுங்

கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத் தொழில்

ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து

மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே!!


பிண்டத்தின் உள்ளுறுபேதைப் புலன் ஐந்தும்

பிண்டத்தினூடே பிறந்து மரித்தது

அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை

அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே!!


இலைப்பொறி யேற்றி யெனதுடல் வைத்தமன் ஈசன்

துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி

நிலைப்பொறி முப்பத்து நீர்மை கொளுவி

உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே!!


இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்

துன்பக் கலசம் அணைவான் ஒருவனே

ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு

வெந்தது சூளை விளைந்தது தானே!!


அறியீ ருடம்பினி லாகிய வாறும்

பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்

செறியீ ரவற்றினும் சித்திகள் இட்ட

தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே!!


உடல் வைத்த வாறும் உயிர் வைத்த வாறும்

மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்

திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்

கடை வைத்த ஈசனைக் கைகலந் தேனே!!


கேட்டுநின் றேன் எங்குங் கேடில் பெருஞ்சுடர்

மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்

கூட்டுகின் றான்குழல் பின்கரு வையுரு

நீட்டிநின் றாகத்துநேர்பட்ட வாறே!!


பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்தபின்

காவுடை தீபங் கலந்து பிறந்திடும்

நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்

பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே!!


எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும்

கட்டிய மூன்று காரணமு மாய்விடும்

ஒட்டிய பாச உணர்வென்றுங் காயப்பை

கட்டி அவிழ்த்திடுஙகண்ணுதல் காணுமே!!


கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிட

பண்ணுதல் செய்து பசுபாவம் நீங்கிட

எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை

மண்முத லாக எடுத்துவைத் தானே!!


அருளள்ள தில்லை அரனவன் அன்றி

அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்

தருகின்ற போதிரு கைத்தாயார் தம்பால்

வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே!!


வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்

தொகுத்திருள் நீக்கிற சோதி யவனும்

பகுத்துணீர் வாகிய பல்லுயிர் எல்லாம்

வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பதுவாமே!!


மாண்பதுவாக வளர்கின்ற வன்னியுங்

காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை

பூண்பது மாதா பிதாவழி போலவே

ஆம்பதி செய்தானச் சோதி தன் ஆண்மையே!!


ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்

பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்

தாண்மிகு மாகில் தரணி முழுதாரும்

பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே!!


பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்

பாய்ந்தபின் னாலோடில பாரினில் எண்பதாம்

பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை

பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமாமே!!


பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்

பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்

பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்

பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே!!


மாதா உதரம் மலமிகில் மந்தனும்

மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்

மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை

மாதா உதரத்தில் வந்த குழவிக்கே!!


குழவியும் ஆணாம் வலத்தது வாகில்

குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்

குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்

குழவி அழியாகுங் கொண்டதால் ஒக்கிலே!!


கொண்டநல்வாயு இருவர்க்கும் ஒத்தொழில்

கொண்ட குழவியுங் கோமள மாயுடுங்

கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்

கொண்டதும் இல்லையாங் கோல்வளை யாட்கே!!


கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்

தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்

பால்வளர்ந்துள்ளே பகலவன் பொன்னுருப்

போல் வளர்ந்துள்ளே பொருந்துருவாமே!!


உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்

பருவம் தாகவே பாரினில் வந்திடும்

மருவி வளர்ந்திடு மாயையி னாலே

அருவம் தாவதிங் காரறிவாரே!!


இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்

தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்

பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்

கெட்டேன் இம்மாயையின் கீழ்மை யெவ்வாறே!!


இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்

துன்புற பாசத்தில் தோன்றி வளர்ந்த பின்

முன்புற நாசி நிலத்தின்முன் தோன்றிய

தொன்புற நாடிநின் றோதலுமாமே!!


குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்

அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்

இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை

மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே!!


முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்

அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்

அதற்கது வாய் இன்ப மாவதுபோல்

அதற்கது வாய் நிற்கும் ஆதிப் பிரானே!!


ஏனோர் பெருமைய னாகினும் எம்மிறை

ஊணே சிறுமையுள் உட்கலந் தங்குளன்

வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்

தானே அறியுந் தவத்தினுள்ளே!!


பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்

உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்

திரைகடல் உப்புத் திரண்டது போலத்

திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே!!


The post திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில் appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1wOR9i2

via IFTTT
Publisher: Unknown - 10:20
,

ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில்

நமச்சிவாய வாழ்க!! நாதன் தாள் வாழ்க!!


இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில்.



திருக்கோயில் அமைவிடம்:

இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் திருக்கோயில், திருவாரூரில் இருந்து 18 km தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 36 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 28 kmதொலைவிலும், நன்னிலத்தில் இருந்து 6 km தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வந்து, அங்கிருந்து திருவாரூர் சாலையில் அமைந்துள்ள சன்னாநல்லூரை அடைந்து, நன்னிலம் வழியாக ஸ்ரீவாஞ்சியத்தை சென்றடையலாம்.


திருத்தலக் குறிப்பு:

தல இறைவன்: ஸ்ரீ வாஞ்சீஸ்வரர் (வாஞ்சிநாத சுவாமி)

தல இறைவி: ஸ்ரீ மங்களாம்பிகை (மருவார்குழலி அம்பாள்)

தல விருட்சம்: சந்தனமரம்

தல தீர்த்தம்: குப்த கங்கை (முனி தீர்த்தம்), எமதீர்த்தம் உட்பட 23 தீர்த்தங்கள்














திருக்கோயில் அமைப்பு:

இன்னும் கிராமங்களின் அழகை தன்னுள்ளே தக்க வைத்துக் கொண்டுள்ள ஸ்ரீ வாஞ்சியத்தில் இந்த அருள்மிகு வாஞ்சிநாதர் திருத்தலம் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத் தலங்கள் 127உள்ளன. அவற்றில் 70-வது தலமாக இத்தலம் அமைந்துள்ளது. அழகிய கோபுர தரிசனம் செய்துகோண்டே திருக்கோயில் உள்ளே நுழைகையில், வலதுபுறமாக சென்றால்,குப்தகங்கை என அழைக்கப்படும் திருக்கோயில் குளம் அமைந்துள்ளது. சற்றே பெரிய குளம். நாங்கள் சென்றிருந்தபோது பள்ளிக் குழந்தைகள் சிலர் திருக்கோயில் உழவாரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பார்க்கவே மனதிற்கு மிக நிறைவாக இருந்தது. திருக்கோயில் வளாகம், திருக்குளம் என அனைத்துப் பகுதிகளையும் மிக அழகாக தூய்மைப் படுத்தினர் அக்குழந்தைகள். அவர்கள் அனைவரது வாழ்வு சிறக்க வாஞ்சிநாதரை வேண்டி, நம் பயணத்தை தொடருவோம்.


புனித கங்கை ஒரு அம்சத்தை மட்டும் விடுத்து மீதமுள்ள 999 அம்சங்களுடன் இங்கு வந்து இத்தல தீர்த்தத்தில் உறைதாக சொல்லப்படுகிறது. இத்தீர்த்த குளத்தில் நீராடி, அக்குளக் கரையோரமாகவே அமைந்துள்ள கங்கைக் கரை விநாயகரை விளக்கேற்றி வணங்கி, பின் திருக்கோயில் உள்ளே வந்தால், நுழைவு வாயிலின் இடப் புறமாக அமைந்துள்ளது இத்தலத்தில் சிறப்பம்சமாக விளங்கும் யமதர்மராஜன் சன்னதி. தனி கோபுரத்தின் கீழ் இச்சன்னதி அமையப் பெற்றுள்ளது. இப்பெருமான் தென் திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். யமதர்மராஜனின் அருகில், நம் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும்சித்திர குப்தர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த யமதர்மராஜன் சன்னதியில் ஒரு பழக்கம் உள்ளது. நாம் அர்ச்சனை செய்யும் எந்த பொருளையும் சரி, திருநீறு பிரசாதங்கள் என்று எதையும் நம்முடன் எடுத்துச் செல்லக் கூடாது என அச்சன்னதி சிவாச்சாரியார் சொல்லக் கேட்டோம்.



இவ்வாறாக எமதர்மராஜனிடம் நம் வேண்டுதல்களை முன்வைத்துவிட்டு, திருக்கோயிலின் அடுத்த கோபுர வாசலை சென்றடையும் முன் இரு புறமும் முறையே அமைந்துள்ளஅபயங்கர விநாயகரையும், பால முருகனையும் தரிசிக்கிறோம். அது போலே, உள் கோபுரத்தைத் தாண்டினால் இடப்புறம் மேலும் ஒரு விநாயகர் சன்னதியும், வலப்புறம்மருவார் குழலி எனும் மங்களாம்பிகை சன்னதியும் அமையப் பெற்றுள்ளது. தொடர்ந்து கொடிமரம், பலிபீடம், நந்தி பகவான் என எல்லாம் வணங்கி விளக்கிட்டு, மூன்றாம் கோபுர வாயிலை அடைகிறோம். அக்கோபுர வாசலின் இருமருங்கிலும், இரட்டை விநாயகரும், அதிகார நந்தியும் அமர்ந்து நம்மை தெய்வ வழிபாட்டிற்கு இட்டுச் செல்கின்றனர்.


பொதுவாக விஷ்ணு திருக்கோயில்களில் கருடாழ்வாரை வணங்கி அவரிடம் அனுமதி பெற்று பின்னர் பெருமாளை வணங்கிட நம் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது ஒரு நம்பிக்கை. அதே போலவே சிவன் திருக்கோயில்களில் கோபுர வாயிலில் அமைந்திருக்கும் அதிகார நந்தியை வணங்கி அவரிடம் அனுமதி வாங்கி சிவனை வழிபட, நினைத்த காரியம் செவ்வனே நிறைவேறும் என்பது காலங்காலமான நம்பிக்கை.


இவர்களைத் தாண்டி உள்ளே சென்றால் அங்கேயும் ஒரு நந்தீஸ்வரர் நம்மை வரவேற்கிறார். அவரை வணங்கி துவாரபாலகர்களைக் கடந்து அர்த்தமண்டபம் தாண்டி உள்ளே கருவறையில் அருள்மிகு வாஞ்சிநாதரை கண்குளிர, ஆம் உண்மையிலேயே எந்த செயற்கையான வெளிச்சத் தூறல்கள் இல்லாமல், கருவறையில் சுவாமியின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள, வட்டக் கண்ணாடியின் உதவியுடன் ஒற்றை ஜோதி நூறு மடங்காய் பரிமளிக்கும் வெளிச்சத்துடன், தீப வெளிச்சத்துடனும், சாம்பிராணி வாசத்துடனும், அதே சாம்பிராணி புகை மூட்டத்தினூடே, கருவறை மூலவரை தரிசிக்கும் இன்பம் எங்கும் எதிலும் கிடைக்காத பேரின்பம்.


பெருமானது தரிசனம் முடிந்து, சுவாமியின் வலப்புறமாக சன்னதியை சுற்றுகையில்சோமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர் தரிசனமும் காணப் பெறுகிறோம்.


தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிரில் பிரகாரத்தின் தென் திசையில் அறுபத்து மூன்று நாயன்மார்கள், தொகையடியார்கள் ஒன்பது பேர், உமாமகேஸ்வரருடன் காட்சி தருகிறார்கள். பிரகாரத்தின் மேற்கு திசையில் சந்திரமௌலீஸ்வரர், கன்னிமூலை கணபதி, சட்டநாதர், மீனாக்ஷி சொக்கநாதர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்,அஷ்டலிங்கம், மகாலட்சுமி என பரிவார தெய்வங்கள் அனைத்தும் தனித்தனி சன்னதிகளில் அமையப் பெற்றுள்ளன.



பின் தென் திசையைப் பார்த்தவாறு சனீஸ்வர பகவானும், பஞ்சபூத ஸ்தலங்களின் சிவலிங்கங்களும், துர்க்கையும், பிரகாரத்தின் வடக்கில் அமைந்துள்ளன.


இவர்களை தீபமேற்றி வணங்கிவிட்டு, சண்டிகேஸ்வரரை வழிபடுகிறோம். சண்டிகேஸ்வரர் ஒரு தீவிர சிவ பக்தர். ஆகையால் தான் எப்போதும் சிவ நாமத்தைச் சொல்வதும், நினைப்பதுவும், கேட்பதுவும் மட்டுமே செய்யக் கூடியவர். சிவ நாமத்தைத் தவிர வேறு எதையும் கேட்க மாட்டேன் என்றிருப்பவர். சண்டிகேஸ்வரர் சன்னதி சென்று நமச்சிவாய! நமச்சிவாய! என ஐந்தெழுத்து மந்திரத்தை வாயார சொல்லிவர நம் வேண்டுதல்கள் தானே நிறைவேறும்.


சண்டிகேஸ்வரரை வணங்கி பின் கிழக்கு முகமாக அமைந்துள்ள மகிஷாசுரமர்த்தினிதெய்வத்தை வணங்கிச் சுற்றி வந்தால், சூரியன், சந்திரன், யோக பைரவர், ஒரே சிற்பமாகராகு கேது போன்றோரது சன்னதி அமைந்துள்ளது. அங்கேயே நடராஜரது சன்னதியும் அமைந்துள்ளது.


இங்கு வாஞ்சிநாதராகிய சிவபிரானே அனைத்துமாக விளங்குவதால் இத்திருத்தலத்தில் நவக்ரஹ சன்னதி அமையப் பெறவில்லை.


திருத்தலச் சிறப்பு:

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி ஆகிய நான்கு முக்கிய நாயன்மார்களாலும் பாடல் பெற்ற ஸ்தலம்.


கங்காதேவி குப்த கங்கையாக 999 கலைகளுடன் இத்தலத் திருக்குளத்தில் உறையும் சிறப்புமிகு தலம்.


108 முறை தாமரை மலர்களைக் கொண்டு இத்தலத்தில் உள்ள ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினியை அர்ச்சனை செய்து வழிபட எல்லாவித நன்மைகளையும் பெறலாம்.


மகாலக்ஷ்மியை திருமணம் செய்ய விரும்பி விஷ்ணு பெருமான் தவம் இருந்த தலம் என்பதால் ஸ்ரீ வாஞ்சியம் எனும் பெயர் வந்தது.


மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் தலை சிறந்து விளங்கும் பெருமை உடைய தலம்.


பிரளயம் உண்டான காலத்திலும் அழிவு இல்லாமல், காலங்களைக் கடந்து நிற்கும் தலம்.


எமதர்மராஜனுக்கு தனியே சன்னதி அமையப் பெற்றுள்ள தனிச் சிறப்பு வாய்ந்த ஸ்தலம். இங்கே சுவாமிக்கு எமதர்மராஜனே வாகனமாகவும் இருக்கிறார்.


காசிக்கு வீசம்படி அதிகம் என்ற சொல்லுக்கும் மேலாக காசியைவிட பல மடங்கு புண்ணியமிகு ஸ்தலம் இந்த ஸ்ரீ வாஞ்சியம்.


பிரம்மன், விஷ்ணு, சூரிய பகவான், தேவர்கள் எனப் பலரும் வழிபட்டு சிவனருள் பெற்ற தலம். சூரிய பகவானுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தருளிய திருத்தலம்.


ராகுவும் கேதுவும் தனித் தனியே இல்லாமல் ஒரே உடலுடன் இங்கு அருள் பாலிப்பதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக உள்ளது.


ஆயுள் விருத்திக்கு இத்தல தரிசனம் ஒரு அருமருந்து.



மருகலுறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையைக்

கருகாவூரின் கற்பகத்தைக் கண்டற்கரிய கதிரொளியைப்

பெருவேளூர் எம்பிறப்பிலையைப் பேணுவார்கள் பிரிவரிய

திருவாஞ்சியத்து எம் செல்வனைச் சிந்தையுள்ளே வைத்தேன்!!

என்ற பாடல் வரிகள் வாயிலாக இத்த்திருத்தலத்துப் பெருமையை நாம் அறியலாம்.


தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்றிலும் சிறந்து விளங்கும் இத்தலத்தில் வாழ்ந்தாலும், இத்தலத்தை நினைத்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி தரும் தலமாக விளங்குகிறது இந்த திருவாஞ்சியம்.


இத்திருத்தலத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் மிக விசேஷமான தினங்கள். பொதுவாக கிரகண காலங்களில் திருக்கோயில்களை சாத்திவிடுவார்கள். ஆனால் கிரகண காலங்களிலும் கோயில் திறக்கப்பட்டு ஈசனுக்கு அபிஷேகங்கள் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருத்தலம் இந்த ஸ்ரீ வாஞ்சியம் திருத்தலம்.


இத்தல தீர்த்தப் பெருமை:

கிருதயுகத்தில் மிக தூய புஷ்கரணி என்ற நாமத்துடனும்,

திரேதாயுகத்தில் அத்திரி தீர்த்தம் என்று விளங்கியும்,

துவாபரயுகத்தில் பராசர தீர்த்தம் என்ற பெயருடனும்,

கலியுகத்தில் முனிதீர்த்தம் என்றும்,

போற்றப்பட்டு வருகிறது இத்தலத்தில் அமைந்துள்ள குப்தகங்கை என்னும் திருக்குளம்.



கிருதயுகத்தில் விஷ்ணு பெருமானிடம் கோபம் கொண்ட மகாலட்சுமி அவரை விட்டுச் செல்ல, மனைவி இல்லாமல் வாடிய திருமால் இந்த திருவாஞ்சியம் வந்து தேவர்கள் புடை சூழ தவமிருந்து, இத்தீர்த்தத்தில் நீராடி வாஞ்சிநாதனை வழிபட, சிவபிரான் லக்ஷ்மி தேவியின் கோபம் தீர்த்து பெருமாளுடன் சேர்த்து வைத்தார். இதனாலேயே இத்தலம்திருவிழைந்ததென்று எனும் பொருள்படும் படியாக திருவாஞ்சியம் எனும் பெயருடன் விளங்குகிறது. கண்ணபிரானும், லக்ஷ்மியும் நீராடிய திருக்குளம் என்பதால் புண்ணிய புஷ்கரணி எனவாயிற்று.


திரேதாயுகத்தில் அத்திரி என்னும் முனிவர் பெருமானார், பிள்ளைச் செல்வம் இன்றி மிகவும் வேதனையுற்று, நாரதரின் உபதேசப்படி இந்த திருவாஞ்சியம் வந்து இந்த தீர்த்தக் குளத்தில் நீராடி, ஈசனை வேண்டி தவமிருக்க, சிவபெருமான் மனமிரங்கி முனிவருக்கு காட்சி தந்துதாத்தத்ரேயனை மகனாக வரமருளிய காரணத்தால் அத்திரி தீர்த்தம் என வழங்கப்பட்டது.


துவாபரயுகத்தில் பிறருக்கு தீங்கிழைத்த காரணத்தினால் மூன்று யுகங்களுக்கு அரக்கனாகவே பிறப்பான் என்ற தண்டனை பெற்ற வீரதனு எனும் அசுரன், அந்த தண்டனையில் இருந்து விடுபட பராசர முனிவரை வணங்கிட, அவர் திருவாஞ்சியம் சென்று அங்குள்ள தீர்த்தக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து இவ்வசுரன் மேல் தெளித்து சாப விமோசனம் தந்தருளினார். இதன் காரணமாக பராசர தீர்த்தம் என விளங்க ஈசன் அருளினார்.


மாசி மக நாளன்று இத்திருக்குளத்தில் நீராட பாவ புண்ணியங்களில் இருந்தும், பிறவி பந்தத்தில் இருந்தும் விடுபட முடியும் என்கிறது புராணம்.


திருவாஞ்சியத்தில் உள்ள தீர்த்தங்கள்:

1. பிரம்ம தீர்த்தம் : கிழக்கு திசையில்

2. நாரத தீர்த்தம் : அக்னி மூலையில்

3. விஸ்வாமித்ர தீர்த்தம் : தென் திசை

4. ஸர்வ தீர்த்தம்

5. பரத்வாஜ தீர்த்தம் : நிருதி திசையில்

6. சேஷ தீர்த்தம் : மேற்கு திசையில்

7. நாராயண தீர்த்தம் : திருக்கோயிலில் இருந்து சற்று தள்ளி

8. ராம தீர்த்தம் : வாயு திசையில்

9. இந்திர தீர்த்தம் : ஈசான்ய மூலையில்

10. ஆனந்த கிணறு : திருக்கோயிலின் உள்ளே


திருவாஞ்சியம் திருத்தலம் பொன்மயமாக கிருதாயுகத்திலும், வெள்ளிமயமாக திரேதாயுகத்திலும், தாமிரமயமாக துவாபரயுகத்திலும் விளங்கியது. மண்மயமாக கலியுகத்தில் விளங்குகிறது.


காசியில் இறைவனடி சேர்ந்தோருக்கு ஒரு சில மணித்துளிகளாவது பைரவவாதனை உண்டாம். ஆனால் இத்தலத்தில் பைரவர் யோகநிலையில் அருள் பாலிப்பதால், பைரவ உபாதை கிடையாது என்னும் சிறப்புடைய தலம். ஏனெனில், பைரவர் ஒரு முறை சிவபிரானின் இஷ்ட திருத்தலமான இந்த ஸ்ரீவாஞ்சியம் வந்தடைந்து பொன்வண்டின் உருவத்தில் கடுந்தவம் இருந்து முக்கண்ணனை சரணடைய இங்குள்ளவர்களுக்கு பைரவ உபாதையே கிடையாது என திருவாஞ்சிநாதர் அருளிச்செய்தார்.


திருத்தல வரலாறு:

முன்பொரு சமயத்தில் கங்காதேவி சிவபிரானை தரிசனம் செய்து தனது மன வேதனையைத் தெரிவித்தார். உலக உயிர்கள் அனைத்தும் தத்தமது பாவங்களை கங்கையில் நீராடி போக்கிக் கொள்வதால் என்னிடம் பாவங்கள் நிறைந்து விட்டது. இத்தகைய எனது பாவங்களை நான் எங்கு சென்று தீர்த்துக் கொள்வேன் என கங்கை ஈசனிடம் வேண்டிநின்றார். அதற்கு பெருமான், தெற்கே அமைந்துள்ள திருவாஞ்சியம் என்னும் திருத்தலம் எமனுக்கே பாபவிமோசனம் கிடைக்கச் செய்த திருத்தலம், அங்கு சென்று உன் பாவங்களைப் போக்கிக்கொள் எனக் கூறி அருளினார். அதன்படியே இங்குவந்த கங்காதேவி இத்தல தீர்த்தத்தில் 999 கலைகளுடன் உறைந்து தங்கிவிட்டார் என்பது வரலாறு.



எமதர்மனுக்கும் சாப விமோசனம் அளித்த தலம்:

ஒருமுறை எமதர்மன் தன் நிலையை எண்ணி வருந்தியபடி இருந்தார். எவ்வளவோ விதமான பதவி நிலைகள் இருந்தும் தனக்கு மட்டும் இப்படி உயிர்களைப் பறிக்கும் பாவ காரியம் செய்யும் பதவி ஏன் வந்தது, என எண்ணி வருந்தினார். உயிர்வதை தொழிலை செய்யும் தனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்துள்ளதாகவும், தன்னைக் கண்டு உயிர்கள் அனைத்தும் பயம் கொள்வதாகவும் திருவாரூர் தியாகராஜ பெருமானைக் கண்டுப் புலம்பினார். அதற்கு அப்பெருமான் ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சினாதரை வழிபட்டு உனது தோஷத்தில் இருந்து விடுபட்டுக் கொள் எனக் கூறினார். அவ்வாறே இத்தலம் வந்து நெடுங்காலம் கடுந்தவம் புரிந்து வாஞ்சிநாதரை வழிபட்டு தனது தோஷத்தில் இருந்து விடுபட்டார் எமதர்மன். இங்கு எமதர்மராஜன் யோக நிலையில் காட்சி தருகிறார். முதலில் உன்னை தரிசித்த பின்னரே என்னை வந்து பக்தர்கள் தரிசிப்பர் எனும் பெரும்பேற்றை ஸ்ரீ வாஞ்சிநாதர் எமனுக்கு வழங்கினார்.



இத்தலத்தில் விளங்கும் அருள்மிகு மகிஷாசுரமர்த்தினி துர்க்கையின் மறு உருவமாய் எங்கும் காணக் கிடைக்காத ஒரு அரிய வடிவமாய் காட்சி தந்து அருள்புரிகிறாள்.


ஸ்ரீ வாஞ்சியம் துர்க்கை துதி:

மனமுடையவளே அச்சங்கடிபவளே

அம்பிகே தாயே வேதாந்தத்தால் அறியப்படுபவளே

கருமைத் தங்கிய மேனியை உடையவளே

அழகியவளே வளர்ந்த முன்மயிரையுடையவளே

மிக்க ஒளியை உடையவளே

யோகினியே நீலகண்டர் மனைவியே

முச்சூலம் தரித்த கையளே

எல்லாச் சிறப்பும் அமைந்த வடிவினளே

பயமகற்றுபவளே மதியணிபவளே

நெற்றிக்கண்ணி ஹே மகா கௌரி

ஹே மகாலட்சுமி, ஹே சரஸ்வதி, ஹே சர்வதேவி

உன் பொருட்டு நமஸ்காரம்

ஹே அம்பிகை கருணை செய்வாய்

காப்பாற்றுவாய் உனக்கு வந்தனம்!!!


திருவாஞ்சியம் திருத்தலத்தில் திருநாவுக்கரச சுவாமிகள் அருளிச் செய்த பதிகம்:

படையும் பூதமும் பாம்பும்புல் வாய்அதள்

உடையும் தாங்கிய உத்தம னார்க்குஇடம்

புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்

அடைய வல்லவர்க்கு அல்லல்ஒன்று இல்லையே!!


பறப்பை யும்பசு வும்படுத் துப்பல

திறத்த வும்முடை யோர்திக ழும்பதி

கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு

சிறப்பு டைத்திரு வாஞ்சியம் சேர்மினே!!


புற்றில் ஆடர வோடு புனல்மதி

தெற்று செஞ்சடைத் தேவர்பி ரான்பதி

சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்

பற்றிப் பாடுவார்க் குப்பாவம் இல்லையே!!


அங்கம் ஆறும் அருமறை நான்குடன்

தங்கு வேள்வியர் தாம்பயிலும் நகர்

செங்கண் மால்இட மார்திரு வாஞ்சியம்

தங்கு வார்தாம் அமரர்க்கு அமரரே!!


நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை

ஆறு சூடும் அடிகள் உறைபதி

மாறு தான் ஒருங்கும் வயல் வாஞ்சியம்

தேறி வாழ்பவர்க்கு செல்வம் ஆகுமே!!


அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு

உற்ற நற்றுணை யாவன் உறைபதி

தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்

கற்றுச் சேர்பவர்க் குக்கருத்து ஆவதே!!


அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்

திருத்தும் சேவடி யான்திக ழும்நகர்

ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம்

அருத்தி யால்அடை வார்க்கு இல்லை அல்லலே!!


The post ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில் appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1wORaT7

via IFTTT
Publisher: Unknown - 10:20
,

உடல் எடையை குறைக்க வேண்டுமா?… அப்போ சூப் குடிங்க பாஸ்!


ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் உடலை கட்டுடலாக, ஒல்லியாக மற்றும் கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். இந்த கட்டுடலைப் பெறுவதற்காக பட்டினியும் கிடப்போம், விதவிதமான உணவுகளையும் சாப்பிட முயற்சி செய்வோம். நாம் எதை சாப்பிட்டாலும், அது நமது உடலில் கொழுப்பாக இருந்து வேலை செய்யும் என்பதே உண்மை.




எனவே, நம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் மற்றும் எடையை குறைக்கவும் நாம் செய்ய வேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவு முறை உள்ளது – அது தான் சூப்! சூப்களை உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலில் அதிகபட்ச கலோரிகள் கூடுவதை புத்திசாலித்தனமாக தவிர்க்க முடியும்.



வெள்ளை பீன்ஸ் சூப்


குறைவான சர்க்கரை, கொழுப்பு மற்றும் சோடியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த சுவைமிக்க பானம் எடையையும் குறைக்கும். நல்ல சுவையும், எளிதில் தயாரிக்கக் கூடியதாகவம் மற்றும் நிறைய புரதங்களை கொண்டிருப்பதும் இந்த சூப்பின் சிறப்பாகும்.




ப்ராக்கோலி சூப்


உங்களுக்கு ப்ராக்கோலியை பிடிக்காவிட்டாலும் கூட, எடை குறைப்பில் அதன் பலன்கள் அபரிமிதமானவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 100 கிராம் ப்ராக்கோலியில் 1.2 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. ஆனால் நிறைய நார்ச்சத்தும், அவசியமான பிற ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன.




பரங்கிக்காய் சூப்


பரங்கிக்காய் சூப் சாப்பிடுவதன் மூலமாக உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை உங்களால் வேகமாக குறைக்க முடியும். கொழுப்பும், சர்க்கரையும் குறைவாக இருந்தாலும், உடலுக்குத் தேவையான புரதங்களும், நார்ச்சத்தும் நிரம்பியிருக்கும் பானமாக இது உள்ளது.




கைக்குத்தல் அரிசியுடன் சிக்கன் சூப்


வேகமாக எடையைக் குறைக்க உதவும் சூப்களில் ஒன்றான இதில், குறைவான அளவு சோடியமும், அதிக அளவு புரதங்களும் உள்ளன. 100 கிராம் பழுப்பு அரிசி சிக்கன் சூப்பில் 0.7 கிராம் மட்டுமே கொழுப்பு உள்ளது.




உருளைக்கிழங்கு சூப்


இந்த சூப்பை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதுடன், எடையையும் உங்களால் குறைக்க முடியும். இந்த பானத்துடன் பல்வகை தானியங்களையும் சேர்த்துக் கொண்டு, குறைவான கொழுப்புடைய பண்டமாக சாப்பிடலாம்.




கேரட் சூப்


சுவைமிக்க கேரட் சூப்பில் கொத்தமல்லியை போட்டு குடிக்கும் போது அது குறைவான சர்க்கரையை கொண்டிருக்கும். 100 கிராம் அளவிற்கு இந்த சூப் உணவை சாப்பிடுபவர்களுக்கு 1.2 கிராம் அளவிற்கே கொழுப்புச் சத்து கிடைக்கும்.



பட்டாணி சூப்


நீங்கள் தினந்தோறும் பட்டாணியுடன், உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை சேர்த்து சூப்பாக குடித்து வந்தால் உடலின் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க முடியும். புரதங்கள் நிரம்பியதாகவும், குறைவான கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் கொண்டதாகவும் இருக்கும் பட்டாணி சூப் ஆரோக்கியமான தேர்வாகவே இருக்கும்.




காளான் சூப்


100 கிராம் உணவில் 1.2 கிராம் அளவிற்கே கொழுப்பைத் தரும் குணம் கொண்ட காளான் சூப் எடையை குறைக்க தேர்ந்தெடுக்க வேண்டிய மிகச்சிறந்த சூப்களில் ஒன்றாகும். இது உடலுக்குத் தேவையான புரதங்களை கொடுப்பதுடன், தேவையற்ற எடையையும் திறமையுடன் குறைக்கிறது.




பருப்பு சூப்


மிகவும் ஆரோக்கியமானதாகவும், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிரம்பியதாகவும் உள்ள பருப்பு சூப் நீங்கள் எடையைக் குறைக்க தேர்ந்தெடுக்க வேண்டிய சரியான சூப் ஆகும். 100 கிராமில் 0.8 கிராம் அளவிற்கே கொழுப்பு உள்ள உணவாக இது உள்ளது.



தக்காளி சூப்


எளிமையாக தயாரிக்கவும் மற்றும் சுவையாக இருக்கவும் கூடிய தக்காளி சூப்பினால் எடையைக் குறைக்க முடியும் என்பது ஆச்சரியமான விஷயமாக தோன்றுகிறதா? இந்த சூப் உங்களுக்குத் தேவையான பொட்டாசியம், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்குகிறது. குறைவான கொழுப்பு மற்றும் சர்க்கரையைக் கொண்டிருக்கும் இந்த சூப்பில் வைட்டமின் சி உள்ளது.





The post உடல் எடையை குறைக்க வேண்டுமா?… அப்போ சூப் குடிங்க பாஸ்! appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1yc6tY1

via IFTTT
Publisher: Unknown - 03:42
,

உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு WIFI- மூலம் எப்படி பகிர்வது?

1. முதலில் START பட்டனை கிளிக் செய்துSearch செல்லவும் பின்பு cmd என்று டைப் செய்து Left கிளிக் செய்து Run As Administrator அழுத்தவும்


2. அதன் பிறகு Command பாக்ஸ்சில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் Wifi டிரைவர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள … கீழ்க்கண்டCommand டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும்


netsh wlan show drivers


இதை டைப் செய்து செய்தவுடன் உங்கள் Wifi டிரைவர் பற்றிய தகவல்கள் வரும் ..அதில்Hosted Network Supported : Yes என்று இருந்தால் மட்டுமே Internet Sharing சாத்தியம் /


3. பிறகு WIFI Profile க்ரியேட் செய்வது எப்படி என்று பார்ப்போம்


கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும்


netsh wlan set hostednetwork mode=allow ssid=kavinspot key=password


இந்த Command டைப் செய்து Enter கொடுத்து விட்டால் WIFI Profile க்ரியேட் ஆகி விடும் . (இதில் ssid என்பது உங்கள் பெயர் … key என்பது உங்கள் Wifi பாஸ் வோர்ட் …ssid பெயர் மற்றும் key பாஸ் வோர்ட் உங்கள் விருப்பத்துக்கு மாற்றி டைப் செய்து கொள்ளலாம் …. )


4. உருவாக்கிய WIFI Profile Activate செய்வது எப்படி ??


கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் …

உடனடியாக Wifi Activate ஆகிவிடும்


netsh wlan start hostednetwork


அவ்வளவு தான் Wifi Activate ஆகிவிட்டது


5.Activate செய்த Wifi De-Activate எப்படி ???

கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் …

உடனடியாக Wifi De-Activate ஆகிவிடும்


netsh wlan stop hostednetwork


அவ்வளவு தான் Wifi De-Activate ஆகிவிட்டது


கண்டிப்பாக இந்த முறையில் Internet Sharing செய்ய முடியும் !!! அப்படி சரியாக வேலை செய்யவில்லை என்றால் Firewall ஆப் செய்துவிட்டு முயற்சிக்கவும்


The post உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு WIFI- மூலம் எப்படி பகிர்வது? appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1yc6tas

via IFTTT
Publisher: Unknown - 03:42
,

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்!

ஒரு காலத்தில் போதுமான, சத்தான உணவின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் என்றால், தற்போது அதிகப்படியான உணவால் அல்லது உடல் உழைப்பின்மையால் உடம்பு பெருத்து அவதிப்படும் நிலை அதிகரித்திருக்கிறது.


‘எனக்கு எடை கூடிடுச்சு… எப்படிக் குறைக் கிறதுன்னு தெரியலை’ என்று பலரும் கவலையோடு பேசுவதைக் கேட்க முடிகிறது.


உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சில நாட்கள் தீவிர உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், பின்னர் அதற்கும் சேர்த்து கூடுதலாக சாப்பிடுவதுதான் நடக்கிறது.

‘ஜிம்’மில் பணம் கட்டி சில நாட்கள் ஆர்வமாக உடற்பயிற்சி அல்லது ஜாகிங் என்று இருப்பவர்கள் அடுத்து அதை மறந்தே விடுகிறார்கள்.


சிலரோ விளம்பரங்களை நம்பி, ‘கஷ்டமில்லாமல்’ உடலைக் குறைக்க எண்ணி, மருந்து, மாத்திரைகள் என்று நாடுகிறார்கள். ஆனால், செயற்கை மருந்துப் பொருட்களின்றி, இயற்கையான, ஆரோக்கியமான உணவுகளின் மூலமே உடல் எடையை குறைக்க முடியும்.


அந்த வகையில், உடல் எடையைக் குறைக்க உதவும் சில பழங்களைப் பற்றிய விவரங்கள் இவை…


தர்பூசணி


தர்பூசணி பலருக்கும் பிடித்த பழம். குறிப்பாக, பயண வேளைகளின்போது தாகம் தணிக்க இது மிகவும் உதவுகிறது. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருப்பதால் இதனை உட்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதுடன், அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும். இதனால் உடல் எடையை அதிகரிக்காது.


பப்பாளி


இதில் கொழுப்பு, கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால், உணவுக் கட்டுப்பாட்டின்போது பப்பாளியைச் சேர்த்துக்கொண்டால், உடல் எடை குறைவதுடன், வயிற்றுப் பிரச்சினைகளும் தீரும்.


லிச்சி


நார்ச்சத்து அதிகம் கொண்ட லிச்சி, மிகவும் இன்சுவையான பழம். இந்தப் பழமும் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.


பிளம்ஸ்


பிளம்சில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்துவிடுகிறது. மேலும் உடலில் தங்கியுள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றிவிடும்.


மாம்பழம்


பலரும் விரும்பிச் சாப்பிடும் மாம்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்களுக்கு உகந்த பழம் இது.


The post உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்! appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/1EQByCW

via IFTTT
Publisher: Unknown - 03:25
,

ஏ.டி.எம். கார்டு… உஷார்… உஷார்…!

முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், இப்போதோ ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது என்பது சர்வசாதாரணம் என்றாகி விட்டது. அதன் விளைவு, இன்றைக்கு பலரது பர்ஸையும் வண்ண, வண்ண ஏ.டி.எம் கார்டுகள் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். இது ஒருபுறம் வளர்ச்சியாக இருந்தாலும், இதன் பாதிப்புகள் அதிகம்..? என்ன அவை..?











கார்டு தொலைந்தால்..?



சிலர் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு, தொலைத்தது கூட தெரியாமல் பல மணிநேரம் இருந்து விடுகிறோம். பிறகு ஞாபகம் வந்து தேடிப் பார்த்துவிட்டு, வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வரும். தொலைந்துபோன ஏ.டி.எம் கார்டைக் கொண்டு, பின் நம்பர் தெரியாமல் எப்படி பயன்படுத்துவார்கள்? ஒரு ஏ.டி.எம் கார்டை கொண்டு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கத்தான் பின் நம்பர் தேவை. அதுவே கடைகளில் பொருட்களை வாங்கி அதற்கான தொகையை ஏடிஎம்-ல் செலுத்தும்போது, பின் நம்பர் தேவையில்லை. எனவே ஏ.டி.எம் கார்டு தொலைந்தவுடன் அதை உடனே சம்மந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை பிளாக் செய்வது மிக மிக முக்கியம்.


ஏமாற்றுப் பேர்வளிகள் பலவிதம்!


சில சமயங்களில் ஏ.டி.எம். சென்டரில் பின்னால் நிற்கும் ஆட்களோ, செக்யூரிட்டியோகூட தண்ணீர் எடுக்க வருவதுபோல் வந்து பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியில் வரும்போது கார்டு இருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு வெளியேறுவது நல்லது.


வங்கியின் அவுட்சோர்ஸிங் வேலைகளைச் செய்து வரும் பி.பீ.ஓ நிறுவன ஊழியர்கள் கூட, பின் நம்பர் உள்ளிட்ட தகவல்களை ‘பாதுகாப்புக்காக’ விசாரிப்பதுபோல் விசாரிப்பார்கள். தகவல்கள் நம்மிடம் இருந்து கிடைத்துவிட்டால், மின்னல் வேகத்தில் டூப்ளிகேட் கார்டை தயாரித்து மோசடியில் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது. என்னதான் அவசர வேலையாக இருந்தாலும் நண்பர்கள், உறவினர்களிடம் ஏ.டி.எம். கார்டைக் கொடுத்து பணம் எடுக்க அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும்.


பின் நம்பர் பத்திரம்!


முடிந்தவரை ஏ.டி.எம். பின் நம்பரை யாரும் எளிதில் கண்டுபிடிக்காத மாதிரி வைத்திருப்பது அவசியம். பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக எண் போன்ற எளிதில் கணிக்கக் கூடிய எண்களைத் தவிர்க்கவும். பாஸ்வேர்ட் மறந்துவிடும் என ஏ.டி.எம் கார்டின் அட்டையிலேயே பாஸ்வேர்டினை எழுதி வைக்கும் முட்டாள்தனம் வேண்டவே வேண்டாம்.


ஸ்கேனிங் திருட்டு!


நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டு பிளாஸ்டிக்கால் ஆனது. அதன் பின்புறம் ஃபிலிம் போல ஒரு ஸ்டிக்கர் இருக்கும். அதில் உள்ள விவரங்கள்தான் ஏ.டி.எம். மெஷினுக்குத் தேவையான விவரங்கள். ஒரிஜினல் கார்டை ஒரு கருவியில் சொருகி, அதிலுள்ள தகவல்களை காப்பி எடுத்துக்கொண்டு, அதை வேறொரு பிளாஸ்டிக் கார்டில் பதிவு செய்து டூப்ளிகேட் கார்ட் ரெடி செய்து மோசடி செய்யவும் அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, ஓட்டல்கள், பார்கள் போன்ற இடங்களில் கார்டை கொடுத்துவிட்டு பில் போடச் சொன்னால், அவர்கள் அதைக் ஸ்கேன் செய்துவிடலாம் என்பதால், நேரில் சென்று பில் போட்டுவிட்டு வருவது முக்கியம்.


ஆன்லைன் திருட்டு!


ஏ.டி.எம். எண், பாஸ்வேர்ட்-ஐ இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா, ஃபிஷிங் திருட்டா என்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்.


விழிப்புணர்வு அவசியம்!


திருடர்களுக்கு அரசும், வங்கியும் சேர்ந்து வாயில் லட்டு வைத்து ஊட்டிவிடுவது போல அல்லாமல், ஒருவர் ஏ.டி.எம். கார்டை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏ.டி.எம். மையம் அமைக்கும் இடத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்தே அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்





The post ஏ.டி.எம். கார்டு… உஷார்… உஷார்…! appeared first on நம்ம கும்பகோணம் .






from WordPress http://ift.tt/14ymtLb

via IFTTT
Publisher: Unknown - 03:25
 

 

Our Service

Awesome Services For our customers