கர்நாடக மாநிலத்தில் 2012-ஆம் ஆண்டு நடந்த சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ஆட்டோ ஓட்டுனருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஹரிஷ் கவுடா என்ற இந்த ஆட்டோ ஓட்டுனர், கடந்த செப்டம்பர் 13, 2012-ஆம் ஆண்டு 14-வயது சிறுமியை அவரது வீட்டில் இறக்கி விடுவதாகக் கூறி ஏமாற்றி காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பெல்தங்காடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து உப்பினங்காடி காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனர் ஹரிஷ் கவுடாவைக் கைது செய்து இந்தியக் குற்றவியல் சட்டம் 376, 363 மற்றும் 506 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பு 18 சாட்சிகளை விசாரித்தனர். அதன் பிறகு கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி புஷ்பாஞ்சலி தேவி ஹரிஷ் கவுடாவை குற்றவாளி என்று அறிவித்தார்.
இதனையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஹரிஷ் கவுடாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். மேலும் பாலியல் பலாத்காரத்திற்காக 7 ஆண்டுகள் சிறையும் ரூ.10,000 அபராதமும், சிறுமியைக் கடத்தியதற்காக ரூ.10,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
from WordPress http://ift.tt/1uDrJCT
via IFTTT