ப்ரிட்டிஷ் காலத்தில் போடபட்டு, இன்னமும் விடாபிடியாக பின்பற்றபடும் சில சட்டங்களை நீக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. அவற்றில் சில: பூமிக்கடியில் 2 அடி ஆழத்துக்கு மேல் கிடைக்கும் 10 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள எந்த பொருளும் "மாட்சிமை தங்கிய மகராணிக்கே" சொந்தம் என கூறும் புதையல் சட்டம் 1878. இதன்படி இன்னமும் பலர் ஜெயிலில் போடபடுகிறார்கள். கல்கத்தாவில் சில பகுதிகளில் விற்கப்படும் எந்த சொத்தும் ஈஸ்ட் இந்தியா கம்பனிக்கு மட்டுமே விற்கபடவேண்டும் என கூறும் சட்டம். ஆண்டு 1838 பழங்குடிகள் சிலவற்றுக்கு உள்ளூர் விதிகள் பொருந்தாது என 1855ல் போடபட்ட சட்டம். காரணம் "அவர்கள் காட்டுமிராண்டி குடிகள்" என்பதால் இந்த விதிவிலக்காம் இந்தியா முழுக்க பலூன், பட்டம் எதுவும் போலிஸ் அனுமதி இன்றி பறக்கவிட கூடாது என்பது தெரியுமா? காரணம் 1934 ஆண்டு பிறப்பிக்கபட்ட சட்டபடி இவை விமானம் என வகைபடுத்தபட்டுள்ளன குஜராத்தின் மேல் விமானத்தில் இருந்துகொண்டு துண்டு பிரசுரம் வீச தடைவிதிக்கும் இரண்டாம் உலகயுத்த சட்டம் ஆந்திராவில் உள்ள மோட்டார் வாகன இன்ஸ்பெகடர் சுத்தமான பல்லுடன் இருக்கவேண்டும் என்றும் வாகன இன்ஸ்பெக்டர் பணிக்கு வருபவர்களுக்கு "புறா மாதிரி நெஞ்செலும்பு, தட்டையான பாதம், எலும்பு முறிவு உள்ள கால்" ஆகியவை இருக்க கூடாது என்ற சட்டம் ஓட்டல்களுக்குள் யார் வேண்டுமனாலும் போய் தண்ணீர் கேட்டால் தண்ணீர் கொடுக்கபடவேண்டும் என்ற 1867 ஆண்டு சட்டம். சமீபத்தில் இப்படி தண்ணீர் கொடுக்க மறுத்ததற்காக ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் மேல் வழக்கு பதிவு செய்யபட்டது. அனைத்து பாக்டரிகளிலும் எச்சில் துப்ப தனியாக பக்கட்டுகள் வைக்கவேன்டும் என்ர சட்டம். அனைத்து பாக்டரிகளிலும் மண்பானைகளில் கட்டாயம் குடிநீர் வைத்திருக்கவேண்டும் என்னதான் நவீனமான தீயணைப்பு சாதனங்கள் வைத்திருந்தாலும் சிகப்பு கலரில் தீ என எழுதபாட்ட பக்கடுகளை வைத்து அதில் நீரும், மணலும் வைத்திருக்கவேன்டும் என்ற சட்டம் தபால்துறையை தவிர வேறு யாரும் கடிதங்களை டெலிவரி செய்யகூடாது என்ற சட்டம். அப்ப இத்தனைநாள் குரியரில் அனுப்பிவந்தது? சட்டபடி அவை டாக்குமெண்டுகள் என்றே குறிப்பிடபட்டு வந்துள்ளன
by இரா வினோத்குமார்
October 09, 2014 at 12:50PM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT
by இரா வினோத்குமார்
October 09, 2014 at 12:50PM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT