தமிழக மீனவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசே காரணம் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கூறினார்.
தமிழக மீனவர்கள் ஐவருக்கு இலங்கை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரியும், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க கோரியும், பால் விலையை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும் ம.தி.மு.க சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தூக்குத் தண்டனைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “மீனவர்களின் தூக்குத் தண்டனைக்கு மத்திய அரசே காரணம். மோடி அரசின் தவறான அணுகுமுறையால் மீனவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்த அரசு இது. இலங்கை அரசு இங்கே ஒருவர் பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்கிறார்” என்று ஆவேசமாக கூறினார்.
The post தமிழக மீனவர்களின் தூக்குத்தண்டனைக்கு நரேந்திரமோடி தலைமையிலான அரசே காரணம் appeared first on நம்ம கும்பகோணம் .
from WordPress http://ift.tt/13IQgQQ
via IFTTT