Welcome

The Eco World

Submenu Section

Wednesday, 11 June 2014

Filled Under:

X-ray மறுசுழற்சி

Share
                         பழைய x -ray க்கள்   - இது எல்லார் வீடுகள் லயும்   கண்டிப்பா ஏதோ ஒரு அலமாரில ஒளிஞ்சுகிட்டு இருக்கும்...திரும்ப அது உதவாது...ஆனாலும் சில நேரம் நம்ம அந்த பழைய x ray க்கள தூக்கி போடாம வச்சுக்கிட்டு இருப்போம்...அத மறுசுழற்சி பண்ற ப்ராஜெக்ட்(!!) தான் இது...

x ray வையுமா அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது... ;-)

x ray ல வரையறதுக்கு பென்சில் தான் கரெக்ட் choice ... ஸ்கெட்ச் um உபயோக படுத்தலாம் .. ஆனா correction பண்ணனும்னா பென்சில்னா அழிச்சுட்டு வரஞ்சுக்கலாம்...
உங்களுக்கு வரைய  தெரிஞ்சா ஓகே... இல்லன்னா  உங்களுக்கு பிடிச்ச படத்து மேல x ray ய  வச்சு easy யா trace பண்ணிடலாம்...

பிறகு போஸ்டர் கலர்ஸ் வச்சு கலர் பண்ணிபருங்க...சும்மா சூப்பரா இருக்கும்...இது நான் அப்படி பண்ணின ஒரு painting ...நான் வரஞ்சுதான் பண்ணிருக்கேன்...போஸ்டர் கலர்ஸ் and 3d கலர்ஸ் உபயோக படுத்திருக்கேன்...
x ray வைத்து வேற என்னல்லாம் பண்ணலாம் ன்னு தேடின அப்போ இந்த படம் கிடைச்சுது...
சின்னதா ட்ரை பண்ணி பாக்கனும்னா butterfly வரஞ்சு ட்ரை பண்ணி பாருங்க...3 னு  butterflies பெரிசு , சின்னது அதுக்கும் சின்னதா ஒண்ணுன்னு வரஞ்சு கலர் பண்ணி குழந்தைங்க ரூம்ல ஒட்டி பாருங்களேன்...


இதுவும் நல்ல ஐடியா தான் இல்லையா...spiral பைண்டிங் பண்றதுக்கு x ray use பண்ணிருக்காங்க... xerox கடை காரங்க வீடு வீடா பேப்பர் collect பண்றவங்க கிட்ட சொல்லி இப்படி x ray collect பண்ணி அவங்க கடையில easy யா recycle பண்ணலாம்...
அது பேராசையோ...:-) முடிஞ்ச அளவு நம்ம வீட்டுக்கு எதாச்சும் xerox இல்ல spiral பைண்டிங் பண்ணினா நம்ம வீட்டுல இருக்கிற x ray க்கள மறு சுழற்சி பண்ணிக்கலாம்...    
இன்னொரு funny ஐடியா... தோரணம் கட்டலாம்...