வீடு கட்ட ஆரம்பித்து விட்டாலே திட்டமிட்டதை விட செலவுகள் எதிர்பாராத வகையில் அதிகரிக்கும். எனவே, நீங்கள் முடிவு செய்ததை விட கணிசமான பணம் கையிருப்பில் வைத்திருப்பது நல்லது. அப்பாதுதான், கட்டிட வேலை தடங்கல் இல்லாமல் முடியும்.
கட்டுமானத்தில் பெருமளவும், முக்கிய பங்கும் வகிப்பது செங்கல்கள்தான். கட்டிட உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு மிக முக்கியமான இடம் உள்ளது. பாரம்பரிய முறையில் சூளை வைத்து தயாரிக்கிறார்கள். நவீன முறையிலான சேம்பர்களிலும் செங்கல்கள் தயாரிக்கப்படுகின்றன. இதை எதை வேண்டுமானாலும் பயன்பதுததலாம். இருப்பினும், செங்கல் வாங்குவதற்கு முன்பு அவற்றின் தரத்தை சோதனை செய்ய வேண்டும். செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதை பார்க்க சில செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் தண்ணீரில் ஊறப்போடுங்கள். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள். அப்போது பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று பொருள் என கட்டுமான தொழிலில் அனுபவம் பெற்ற சிலர் கூறுகின்றனர்.
‘இன்டர்லாக் செங்கல்கள்‘ என்ற செங்கல் வகையும் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் அளவில் மூன்று செங்கற்களுக்கு இணையானது. இதனால் கட்டுமான வேலை எளிதாகவும், விரைவாகவும் முடிய வாய்ப்புகள் அதிகம். கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும்.
நீங்களே நேரில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டால் இந்த சேதாரம் எவ்வளவு என்று கணக்கிட முடியும். நீங்கள் செல்லமுடியாவிட்டாலும், உங்கள் குடும்பத்தில் ஒருவரை கண்காணிப்பதற்காக நியமியுங்கள். கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது மிகுந்த கவனம் தேவை. அவர் இதற்கு முன்பு கட்டிய கட்டிடங்கள் எதுவென்று தெரிந்தால் நேரில் சென்று பார்த்துவிட்டு வாருங்கள். முடிந்தால் அந்த வீட்டில், அல்லது கட்டிட உரிமையாளரிடம் இதுபற்றி விசாரியுங்கள். அப்போது அந்த கான்டிராக்டர் பற்றிய ஒரு மதிப்பீடும், கட்டுமான பணியில் உள்ள சிரமங்கள், அதை எவ்வாறு சமாளிப்பது என்பன பற்றிய விவரங்கள் தெளிவாக உங்களுக்கு புரியும். கான்டிராக்டர் எடுத்துச்செய்ய முந்தைய கட்டிட வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது நேர்மை, எந்த அளவுக்கு நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப வீடு கட்டி தருகிறார் என்பதையெல்லாம் ஒன்று விடாமல் விசாரித்துவிடுங்கள்.
சிலர் பின்னாளில் விலை ஏறிவிடுமோ என்று நினைத்து கட்டுமான பணிக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மொத்தமாக வாங்கி வந்து விடுகிறார்கள். இந்த நடைமுறை மிகவும் தவறு. இப்படி செய்வதால் நமது பணம் ஒரே இடத்தில் முடங்கி விடுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே, தேவைக்கேற்ப கட்டுமான பணியின் ஒவ்வொரு கட்டத்துக்கும் தகுந்தவாறு பொருட்களை வாங்கிக்கொடுங்கள்.
மொத்தமாக கான்டிராக்ட் விட்டுவிட்டால் இந்த கவலை இல்லை. இருப்பினும் இதுபற்றி முன்கூட்டியே கறாராக பேசி முடித்து விடுங்கள். கட்டுமான பணி ஒப்படைப்பின்போது நீங்கள் பேசிக்கொண்ட முக்கிய விஷயங்கள் அனைத்தையும் ஒப்பந்தத்தில் எழுதி கையெழுத்து வாங்கி விடுங்கள்.
சமீபத்திய தொழில் நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் குறிப்பிடத்தக்க அளவு மிச்சமாகும். செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு. அதிகமாக சேதம் அடைவதையும் தவிர்க்கலாம். ஒரு அறைக்கும் இன்னொரு அறைக்கும் இடையே குறுக்குச்சுவர் அமைத்தால் அதை வழக்கமான அளவில் இல்லாமல் ஒன்றை செங்கல் வைத்து அமைக்கலாம்.
இதனால் உள்புற இடமும் புழங்குவதற்கு அதிகம் கிடைக்கும். செலவும் குறையும். கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட் களை மிக மிக கவனமாக கையாளுங்கள்.
The post கட்டுமான செலவை குறைக்க என்ன வழி? வீடு கட்ட எந்த வகை செங்கல் ஏற்றது appeared first on Kumbakonam.
from WordPress http://ift.tt/1xo5yTD
via IFTTT