“வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்று கூறுவார்கள். புதிதாக வீடு கட்டும்போது தான் என்றில்லை, பழைய வீட்டை வாங்கும்போதும் நிறைய கவனம் தேவை. பெருநகரங்களில் தனி வீடு வாங்குவதற்கு சில கோடிகளும், புதிய அப்பார்ட்மென்ட் வாங்க பல லட்சங்களும் தேவைப்படுகின்ற இந்த காலத்தில் பட்ஜெட்டில் வாங்க சிறந்த சாய்ஸ் பழைய வீடு அல்லது பழைய ஃபிளாட் வாங்குவது தான்.
தேர்வு செய்யும் முறை
பைக் அல்லது கார் வாங்கும் போது என்ன மாடல் என்று கேட்டு வாங்குவது போல் தான் இங்கும். பொதுவாகபழைய ஃபிளாட் என்றால் அது, கட்டப்பட்டு பதினைந்து வருடத்திற்கு உட்பட்டதாக இருப்பது சிறந்தது.
விலை மதிப்பீடு செய்வது எப்படி?
பல்வேறு விஷயங்களை பொறுத்தே ஒரு ஃ பிளாட்டின் விலையை மதிப்பீடு செய்ய முடியும். அதாவது அந்த ஃபிளாட் அமைந்துள்ள இடம், கட்டடத்தின் வயது, கட்டடத்தின் வலிமை, பராமரிப்பு, வீட்டை கட்டிய பில்டர் போன்ற காரணிகளை கொண்டு ஒரு ஃபிளாட்டின் விலை மதிப்பிடப்படுகிறது. ஒரு பழைய ஃபிளாட், புதிய ஃபிளாட்டுகளை விட 15%-40% வரை விலை குறைவாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எல்லா விதத்திலும் சிறந்த ஃபிளாட்எனும்போது புதிய ஃபிளாட்களை விட 15%-20% விலை குறையும்.
வீட்டின் வயது – புதிய ஃபிளாட்டை விட எவ்வளவு குறைவு
5 ஆண்டுகள் வரை – 15% to 20%
5 முதல் 10 ஆண்டுகள் வரை – 20% to 25%
10 முதல் 15 ஆண்டுகள் வரை – 25% to 30%
15 முதல் 20 ஆண்டுகள் வரை – 40% to 45%
சிக்கல்கள்
சொத்திற்கான அட்வான்சாக அதிகபட்சம் 5,000 மட்டும் கொடுத்து வில்லங்கம் ஏதும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தாய் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று வழக்கறிஞரை கொண்டு ஆராய்வது சிறந்தது. பத்திரம் தொலைந்துவிட்டது, டூப்ளிகேட் பத்திரம் வாங்கி இருக்கிறோம் என்று சொன்னால்எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. வங்கியில் அல்லது தனிநபர்கள் யாரிடமாவது கடன்வாங்கிவிட்டு,அதைகட்டாமல் அல்லது கொஞ்சம் கட்டிவிட்டு, பத்திரம் தொலைந்துவிட்டது என்று போலீசில் புகார்செய்து டூப்ளிகேட் பத்திரம் வாங்க அதிக வாய்ப்பு இருக்கின்றன. டூப்ளிகேட் பத்திரம் உள்ள வீட்டைவாங்கினால், பின்னால் முதலுக்கே மோசம்வர அதிக வாய்ப்பு இருக்கிறது. விலை மலிவாகஇருந்தாலும் இது போன்ற வீட்டைத்தவிர்ப்பது நல்லது. மேலும், சொத்து கைமாறுவதற்கு முன்வீட்டுவரி, தண்ணீர்வரி போன்றவற்றை சரியாக கட்டியிருக்கிறார்களா என்பதைஉறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும், இவற்றுக்கான இணைப்பை உங்களின் பெயரில்மாற்றிக்கொள்ள பணம்கொடுக்கும் போதே கையெழுத்து வாங்கிக்கொள்வது அவசியம்.
தனி வீட்டின் மதிப்பு
தனி வீட்டை பொருத்தவரை அது அமைந்திருக்கும் மனையின் சந்தை விலையோடு கட்டடத்தின் அப்போதைய மதிப்பை சேர்த்தால் வீட்டின் மொத்த மதிப்பு கிடைக்கும். பழைய தனி வீட்டின் மதிப்பை ஒரு என்ஜினியர் மூலம் மதிப்பீடு செய்வது நல்லது.
+ மற்றும் -
குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு போன்றவற்றை ஏற்கனவே வாங்கி வைத்திருப்பதால் அவற்றுக்கு தனியாக அலைய வேண்டியதில்லை. செலவும் மிச்சம்.
பழைய அடுக்குமாடி குடியிருப்பு எனும்போது யூ.டி.எஸ். (undivided share) தவிர வீட்டின் மதிப்புக்கும் (தேய்மானம் போக) 9% முத்திரை தாள் மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும். அந்த வகையில் சொத்து பதிவுக்கட்டணம் அதிகமாக இருக்கும்.
The post பழைய வீட்டை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை! appeared first on Kumbakonam.
from WordPress http://ift.tt/1w4IPOx
via IFTTT